Published:Updated:

வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!

வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!
பிரீமியம் ஸ்டோரி
வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!

உயிரைப் பறித்த சாதிவெறி...

வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!

உயிரைப் பறித்த சாதிவெறி...

Published:Updated:
வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!
பிரீமியம் ஸ்டோரி
வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கொலைசெய்யப்பட்ட மேலாளர் சங்கரராமனின் மருமகனும் அ.தி.மு.க பிரமுகருமான கண்ணன் என்பவர், காதல் விவகாரம் தொடர்பாக ஒரு பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து கட்டப்பஞ்சாயத்து செய்ததால், அந்த இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் அ.தி.மு.க பிரமுகரைக் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரின் மகள் கல்பனாவும், சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் ஸ்ரீகரனும் காதலித்துவந்தனர். இதற்கு ஸ்ரீகரனின் பெற்றோர் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. காரணம், இருவரும் வெவ்வேறு சாதியினர். இந்தநிலையில்தான் ஸ்ரீகரனின் குடும்பத்தினர், கல்பனாவின் வீட்டுக்கு ஆட்களை அனுப்பிக் கொலை மிரட்டல் விடுத்ததால் விரக்தியடைந்த கல்பனா, தற்கொலை செய்துகொண்டார்.

வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!

காஞ்சிபுரம், சிங்கப்பெருமாள் கோயில் தெருவில் உள்ள கல்பனாவின் வீட்டுக்குச் சென்றோம். கல்பனாவின் தந்தை ஆதிகேசவனுக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். “கல்பனாவும் ஸ்ரீகரனும் அஞ்சு வருஷமா காதலிச்சிருக்காங்க. கடந்த தீபாவளிக்கு முன்னதாக, கல்பனா என்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னா. ‘அவங்க வேறு சாதி. இது, நமக்கு ஒத்துவராது’ன்னு சொன்னேன். ஆனா, ‘ஸ்ரீகரனைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன்’னு உறுதியா இருந்த என் மகள், அஞ்சு நாளா சாப்பிடாம அறையிலேயே முடங்கிக் கிடந்தா. அப்போ ஸ்ரீகரனே எங்க வீட்டுக்கு வந்து, ‘கல்யாணத்துக்கு எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க’ன்னு சொன்னான். அப்புறம், திடீர்னு மார்ச் 9-ம் தேதி ராத்திரி போன் பண்ணி, ‘எங்க வீட்ல கல்யாணத்துக்குச் சம்மதிக்கலை’ன்னு ஸ்ரீகரன் சொன்னான். அதனால, ராத்திரி முழுக்கச் சாப்பிடாம அழுதுகிட்டே இருந்த கல்பனா, மறுநாள் சாயங்காலம் அவங்க வீட்டுக்குப் போனா. அப்போ, ஸ்ரீகரனோட அப்பா துரையும் அவங்க குடும்பத்தினரும் கல்பனாவை அடிச்சு, கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளியிருக்காங்க.

மறுநாள் காலையில அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கண்ணனும், ஸ்ரீகரனோட தாய்மாமா ரகுவும் எங்க வீட்டுக்கு வந்து, கல்பனாவை மிரட்டினாங்க. ‘ஸ்ரீகரனை மறந்துடு. இனிமேல் அந்த வீட்டுப் பக்கம் நீ வரவே கூடாது. வந்தா உன் வீட்டுல ஒருத்தரும் உயிரோட இருக்க மாட்டாங்க. நீ எங்க போய் புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது. பெரிய ஆளுங்க எல்லாம் எங்களுக்கு நெருக்கமானவங்க. நீ சாகுறதா இருந்தா செத்துரு, எங்களுக்குக் கவலையே இல்லை’னு சொல்லிட்டு வெளியே வந்தாங்க. நாங்க சாதாரணமானவங்க. எங்களால என்ன செய்ய முடியும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!

உடனே கல்பனா அறைக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிட்டா. நாங்க கதவைத் தட்டித் தட்டிப்பார்த்தோம். கதவை உடைச்சுப் பார்க்கும்போது அவ தூக்குல தொங்கிட்டு இருந்தா. நாங்க கதறித் துடிச்சோம். அந்த நேரத்துல, கண்ணன் போன் செஞ்சார். அவர்கிட்ட, ‘என் மக செத்துட்டா. உன்னை விடமாட்டேன்’னு நான் சொன்னேன். உடனே, அவர் போனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சுட்டார். ஆளும் கட்சி அரசியல் தைரியமும், ஆதிக்கச் சாதிவெறியும் சேர்ந்து அவளைக் கொன்னுடுச்சு. எங்களுக்கு நீதி கிடைக்கணும்” என்று கதறினார்.

கல்பனாவின் அம்மா செல்வி, “முதல்ல அவன்தான் என் மகளைக் காதலிச்சிருக்கான். கல்பனா சம்மதிக்காததால, அவளோட கால்ல விழுந்து கெஞ்சியிருக்கான். அதுக்கப்புறம் அவ மனசு இறங்கி அவனோட பழகியிருக்கா. அவ செல்போன் முழுக்க அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட வீடியோவும் போட்டோவுமா இருக்கு. கடைசியில இப்படி ஏமாத்திட்டான். தூக்குல தொங்கறதுக்கா நாங்க இத்தனை வருஷமா அவளைச் சீராட்டி வளர்த்தோம்” என வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.

விஷ்ணு காஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ் சண்முகம், “ஸ்ரீகரன், அவரின் அப்பா துரை, அம்மா மாலா, அ.தி.மு.க பிரமுகர் கண்ணன், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீகரனின் தாய்மாமா ரகு ஆகியோர்மீது கொலைமிரட்டல் விடுத்துத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். கண்ணனை மட்டும் கைதுசெய்துள்ளோம். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை ஸ்பெஷல் டீம் அமைத்துத் தேடிவருகிறோம். கண்ணன்மீது இந்தக் காவல்நிலையத்தில் மூன்று வழக்குகள் உள்ளன” என்றார்.

சாதிவெறியால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.

- பா.ஜெயவேல்

வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!

யார் இந்த கண்ணன்?

.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கண்ணன், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கொலைசெய்யப்பட்ட மேலாளர் சங்கரராமனின் மருமகன். இவர் அ.தி.மு.க-வில் வட்டச் செயலாளராக இருக்கிறார். காஞ்சிபுரம் பகுதியை மிரட்டிவந்த, மறைந்த ரவுடி ஸ்ரீதர் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தபோது, அவருக்குப் பணம் வசூலித்துக் கொடுத்தது, கட்டப்பஞ்சாயத்து செய்தது என அவர் மீது வழக்குகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism