Published:Updated:

இறந்தது என் மகனா; உறுதியான தகவல் வேண்டும் - சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை உருக்கம்  

இறந்தது என் மகனா; உறுதியான தகவல் வேண்டும் - சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை உருக்கம்  
இறந்தது என் மகனா; உறுதியான தகவல் வேண்டும் - சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை உருக்கம்  

"எனது மகன் இறந்ததுகுறித்து எந்தத் தகவலும்,  எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. உறுதியான தகவல் தெரியாத காரணத்தால் குழப்பமான நிலையில் இருக்கிறோம். அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்று காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியனின் தந்தை உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன், சுப்பிரமணியன் (28). ஐடிஐ வரை படித்துள்ள சுப்பிரமணியன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிஆர்பிஎஃப்-பில் சேர்ந்தார். உத்தரப்பிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சுப்பிரமணியன், சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

தைப் பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன், கடந்த ஞாயிறன்றுதான் ஊரிலிருந்து சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில், தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்து, வேலைக்குச் செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரின் குடும்பத்திற்கு இதுவரை எநந்த் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், குழப்பமான சூழ்நிலை இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்தி தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியின் தந்தை கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது மகன் இறந்ததுகுறித்து எந்தத் தகவலும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், உறுதியான தகவல் தெரியாத காரணத்தால் குழப்பமான நிலையில் இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியனின் தந்தை கணபதி தெரிவித்துள்ளார்.