சென்னை என்ற இப்பெருநகரத்தின் வயது 400 எனச் சொல்லப் படுகிறது. 400 வருட வரலாற்றை, கலாசாரத்தை, இங்கு வாழ்ந்த பல மக்களின் வாழ்வை, இதன் பாரம்பர்யச் சின்னங்களை ‘மெட்ராஸ்’ என்ற ஒரு சொல் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. மெட்ராஸின் வரலாற்றை, வசீகரத்’தை இந்தத் தலைமுறை இளைஞர்களுக்குக் கொண்டு சென்றவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர் எஸ்.முத்தையா. கடந்த 20ஆம் தேதி அவர் இறந்தபோது அவருக்கு வயது 89. ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்படும் ‘மெட்ராஸ் டே’ உருவாகக் காரணமாக இருந்தவர் முத்தையாதான்.

சிவகங்கையில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து அமெரிக்காவில் கலை மற்றும் பொறியியல் பயின்ற அவருக்கு சென்னையின் பிறந்ததினத்தைக் கொண்டாட எண்ணம் வந்தது ஆச்சர்யமான ஒன்று. ‘தி டைம்ஸ் ஆஃப் சிலோன்’ பத்திரிகையில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். ‘டி.டி.கே மேப்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றியபோது சென்னை குறித்த தகவல்களை அறிய ஆரம்பித்தார். அப்போது தொடங்கி இறக்கும் வரை அவரது நினைவில் ‘மதராஸ்’ நீக்கமற நிறைந்திருந்தது. அவருடன் இணைந்து பணிபுரிந்த எழுத்தாளர் இந்திரன், முத்தையா குறித்துச் சில நினைவுகளைப் பகிர்ந்தார்.

“முத்தையா என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது அவரது ‘கறார்’ தன்மையும் உபசரிப்பும்தான். சென்னை பிரிட்டிஷ் கவுன்சில், கலை, கலாசாரம் எனப் பல தலைப்புகளில் சென்னை குறித்த ஒரு முழுமையான ஆவணத்தைத் தயார் செய்தது. அதில் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. சென்னையில் இன்று நாம் காணும் பழைய பிரிட்டிஷ் காலத்துக் கட்டடக்கலையை அவர் வியந்து பாராட்டுவார். வாரம்தோறும் சென்னை குறித்த நூல்களைப் பற்றிய உரையாடல் நிகழும். அப்போது, கொடுத்த நேரத்தைத்தாண்டி யாரையும் பேச அனுமதிக்க மாட்டார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, சென்னையின் பாரம்பர்யமான கட்டடங்கள் இடிபடுவதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது. ‘மெட்ராஸ் டே’ கொண்டாடக் காரணமானவர் அவர். அதன் கொண்டாட்டத்தின்போது ஓவியர் அரஸ் வரைந்த சென்னை கார்ட்டூன் அவருக்கு மிகப்பிடித்தமான ஒன்று. இறுதிவரை இந்நகரின் வரலாற்றுப் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றினார்” என்கிறார் உருக்கமும் பெருமிதமுமாக.

அடுத்து வரும் ‘மெட்ராஸ் டே’, முத்தையா இல்லாத தினம் என்பது ஒரு வரலாற்று இழப்புதான்.

-சக்தி தமிழ்ச்செல்வன்