Published:Updated:

நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?

நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?
பிரீமியம் ஸ்டோரி
நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?

ஓவியம்: பாலகிருஷ்ணன்

நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?

ஓவியம்: பாலகிருஷ்ணன்

Published:Updated:
நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?
பிரீமியம் ஸ்டோரி
நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?

தேனும் தாக்குதல் நடைபெறும்போது மட்டும் நாம் தேசபக்தி குறித்தும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை குறித்தும் பேசுகிறோம். ஆனால், பகைநாடுகளின் நெருக்கடிகளை மட்டுமல்ல, உள்ளுக்குள்ளேயே பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கும் இக்கட்டான நிலையில் நம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா?

  தேஜ் பகதூர் யாதவ் என்ற எல்லைக் காவல் படை வீரரை நினைவிருக்கிறதா? 2017-ம் ஆண்டு ‘எங்களுக்குத் தரும் சாப்பாடு தரமற்று இருக்கிறது’ என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். பிறகு அந்தத் தகவல் தவறு என்று அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாமும் மறந்துபோனோம். ஆனால் பிரச்னை அவ்வளவு எளிதானதில்லை.

அதிகரித்துவரும் ராணுவ வீரர்களின் தற்கொலை விவரம் குறித்து சமீபத்தில் ராஜ்ஜியசபையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ராணுவ வீரர்களின் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ளார்.

நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?

2016ஆம் ஆண்டு தரைப்படை வீரர்கள் 104, விமானப்படை வீரர்கள் 19, கப்பற்படை வீரர்கள் 6 என மொத்தம் 129 வீரர்களும்; 2017ஆம் ஆண்டு தரைப்படை வீரர்கள் 75, விமானப்படை வீரர்கள் 21, கப்பற்படை வீரர்கள் 5 என மொத்தம் 101 வீரர்களும்; 2018ஆம் ஆண்டு தரைப்படை வீரர்கள் 80, விமானப்படை வீரர்கள் 16, கப்பற்படை வீரர்கள் 8 என மொத்தம் 104 வீரர்களும் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வீரர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து என  அனைத்தும் தரமானதாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்குத் தேவையான பயிற்சிகள் வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும். தங்கள் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ‘மன்சிக் சஹாயத்தா ஹெல்ப்லைன்’ தொடங்கப்பட்டு, ராணுவ வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியாகும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கைக்குச் சற்றும் குறைந்ததல்ல தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கும் வீரர்களின் எண்ணிக்கை. சவுத் ஏசியா டெரரிசம் போர்ட்டல் (South Asia Terrorism Portal) தகவலின்படி பயங்கரவாதிகளுடனான மோதல்களில்  2016ஆம் ஆண்டு 88 இராணுவ வீரர்களும்  165 பயங்கரவாதிகளும்; 2017ஆம் ஆண்டு 172 இராணுவ வீரர்களும் 433 பயங்கரவாதிகளும்; 2018ஆம் ஆண்டு  183 இராணுவ வீரர்களும்  545 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது தற்கொலை செய்துகொண்டு உயிரை விடும் வீரர்களுக்கு நிகராக உள்ளது.

நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?

இதுகுறித்து, புது டெல்லியில் இயங்கிவரும் ‘வாய்ஸ் ஆப் எஸ் சர்வீஸ்மேன் சொசைட்டி’யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பீர் பகதூர் சிங், “ராணுவ வீரர்களுக்கு மேலதிகாரிகளால் கொடுக்கப்படும் அழுத்தங்கள் இதற்கு ஒரு முக்கியமான காரணம். அவர்களின் ஷூக்கு பாலீஷ் போடுவதிலிருந்து, அவர்களின் வீட்டு வேலை, தோட்டவேலை என அனைத்தையும் வீரர்கள் செய்ய நிர்பந்திக்கப்படு கின்றனர். கட்டுக்கடங்காத ஊழல் இங்கே அரங்கேறுகின்றது. வீரர்களுக்குச் சரியான உணவு வழங்கப்படுவது கிடையாது. போதுமான ஓய்வு வழங்கப்படுவது கிடையாது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் பூர்த்தி செய்வது கிடையாது. தற்கொலைகள் அதிகரிக்க இப்படிப் பல காரணங்கள்” என்கிறார்.

முன்னாள் ராணுவ வீரர் ஒருவரிடம் பேசியபோது, “மிலிட்டரிக்கு வேலைக்குப் போறோம்னு நல்ல கெத்தா ஊருக்குள்ள சொல்லிட்டு வருவோம். ஆனா அங்க போனாதான் தெரியும். டிரெய்னிங்கிலேயே பல டார்ச்சர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதுக்கப்புறம் தொடர்ச்சியான மன உளைச்சல்கள். ஒருகட்டத்தில் வெறுத்துப்போய்த்தான் வேலையை விட்டேன்” என்கிறார்.

 தற்போது பணியிலிருக்கும் ஒரு ராணுவ வீரரிடம் பேசியபோது, “வீட்டுல சொகுசா இருந்துட்டு மிலிட்டரிக்குப் போற யாராலையும் அங்க தாக்குப்பிடிக்க முடியாது. ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கும். அதிலும் பார்டர்ல இருக்குறப்போ நாலஞ்சு மணி நேரம்தான் தூங்குறதுக்கே கிடைக்கும். அதுவும் அலெர்ட் கொடுத்திட்டாங்கன்னா தூக்கமே கிடையாது” என்கிறார்.

நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?

“தற்கொலை எண்ணம் ஏன் ஒருவருக்கு வருகிறது? ‘இனி வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாது, நம்மால் எதுவும் செய்ய முடியாது, மற்றவர்களை எதிர்கொள்ள முடியாது, இப்படி அவமானங்களை எதிர்கொள்வதற்குப் பதில் இறப்பதே மேல்’ என்ற எண்ணம் அதிகரிக்கும்போதுதான் தற்கொலை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மற்றொன்று அதிக அளவிலான மன அழுத்தம் மேலோங்கி, வாழ்க்கைமேல் பற்று இல்லாமல் இருக்கும்பொழுதும் தற்கொலை எண்ணம் மேலோங்கும். பொதுவாக, ராணுவத்தில் சேர்பவர்கள், தான் செய்யும் வேலையின்மீது மரியாதை உள்ளவர்கள், தங்களை நாயகர்களாக நினைத்துக்கொள்கிறவர்கள், மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிந்தவர்கள், ஆனால் அவர்களே தற்கொலை முடிவுக்குச் செல்கிறார்கள் என்றால், அழுத்தம் அந்தளவுக்கு இருக்கிறது என்றுதான் அர்த்தம். தொடர்ச்சியான கவுன்சலிங் மூலம் இதைத் தடுக்கலாம். ஆனால் அதற்கான தகுந்த ஏற்பாடுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை” என்கிறார் உளவியல் மருத்துவர் ஷாலினி.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளப் பலமுறை  முயற்சி செய்தோம். ஆனாலும் தகுந்த பதில்கள் கிடைக்கவில்லை.

தாயகம் காக்க உயிரை இழக்கும் வீரர்கள் தியாகம் போற்றும் அதேவேளை, தற்கொலை செய்துகொண்டு உயிரைப்போக்கும் வீரர்களின் நிலை குறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.

- துரைராஜ் குணசேகரன்,