Published:Updated:

சாமி கும்பிடபோன மூவர் சாமியிடமே போய் சேர்ந்த சோகம்

சாமி கும்பிடபோன மூவர் சாமியிடமே போய் சேர்ந்த சோகம்
சாமி கும்பிடபோன மூவர் சாமியிடமே போய் சேர்ந்த சோகம்

திருவாரூர்: சாமி கும்பிட போன மூவர் ரயிலில் அடிபட்டு சாமியிடமே போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள அச்சுபுலியூர் கிராமம். இங்குள்ள பொன்.முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக சாமி வீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தனியார் கல்லூரி மாணவர் விவேக் கண்ணன், தனியார் நிறுவன ஊழியர் சிவசங்கரன் மற்றும் சேகர் ஆகிய மூவரும் சாமி ஊர்வலத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்தனர்.

சாமி கும்பிடபோன மூவர் சாமியிடமே போய் சேர்ந்த சோகம்

ஒவ்வொரு இடத்திலும் சாமி ஊர்வலம் நின்று நின்று வரும் என்பதால் இவர்கள் வேகமாக முன்னாள் நடந்து சென்று ஆங்காங்கே அமர்ந்து வந்தனர். அப்படி அச்சுபுலியூர் ரயில் நிலையம் வந்த இவர்கள் அங்கே மது அருந்தியதாக தெரிகிறது. மது மயக்கத்தில் வெகு நேரம் வரை அங்கேயே அமர்ந்திருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தள்ளி ரயில்வே இருப்பு பாதையில் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

சாமி கும்பிடபோன மூவர் சாமியிடமே போய் சேர்ந்த சோகம்

பேச்சு சுவாரசியத்தில் அப்படியே தண்டவாளத்திலேயே தூங்கி இருக்கிறார்கள். விடியர் காலை 5 மணியளவில் காரைகால் தனியார் துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றுவதற்காக திருவாரூரில் இருந்து சென்ற சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல்கள் துண்டு துண்டாக சிதறி மூவரும் பலியானார்கள்.

##~~##
தகவலறிந்து திருவாரூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று உடல் பாகங்களை பொறுக்கி மூட்டைக்கட்டி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கரு.முத்து

படங்கள்: கே.குணசீலன்