‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’’
என்ற பாரதியாரின் பாடல் வரிகளை 93 வயதில் இயற்கையுடன் கலக்கும் தறுவாயிலும் பாடியபடி யிருந்தார், மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மூத்த செயற்பாட்டாளர் எஸ்.எம்.முகமது இத்ரீஸ்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் பிறந்து, இளம் வயதில் தன் தந்தையுடன் பினாங்கு பகுதியில் குடியேறினார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, பொதுச்சேவையில் ஆர்வம் இருந்தபடியால், நுகர்வோர் உரிமை, மனித உரிமை, சுற்றுச்சூழல் போன்றவற்றுக்குக் குரல் கொடுக்கத் தொடங்கினார். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு, ஓர் உணவகத்தின் சிறிய பகுதியில் ‘பினாங்குப் பயனீட்டாளர் சங்கத்தை’ (Consumers Association of
Penang) நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.

இந்தச் சங்கத்தில் மலேசியாவில் உள்ள முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதம மந்திரிகள் போன்றவர்கள் அங்கம் வகித்துச் செயல்பட்டுள் ளார்கள். இவரது அமைப்பு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாகத் தான், 1975-ம் ஆண்டு, மலேசிய அரசாங்கம் ‘சுற்றுச்சூழல் துறை’யை உருவாக்கியது. மலேசிய விவசாயிகளைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி இயற்கை விவசாயம் கற்று வரச்செய்து, பினாங்கு மாநிலத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்பிய முன்னோடி இவர். ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் போன்றவர் களை மலேசியாவுக்கு வரவழைத்து, தமிழ், சீன, மலேசிய விவசாயிகளுக்கு இயற்கை விவசாய நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க வைத்தார்.

‘‘தமிழ் இலக்கியங்களிலும், தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இயற்கையுடன் கலப்பதற்குச் சில தினங்களுக்கு முன்புகூட, நம் குழந்தைகளுக்கு ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற நல்ல நூல்களைப் படிக்கச் சொல்ல வேண்டும். பள்ளி களில் சூழலியல், இயற்கை விவசாயம், உணவு விரயத்தைத் தடுப்பது, சிக்கனமாக, எளிமையாக வாழ்வது குறித்துக் கற்றுக்கொடுக்க வேண்டும் என அக்கறையாக ஆலோசனை வழங்கினார்’’ எனக் கலங்கியபடியே பேசுகிறார், நாற்பதாண்டுக் காலம், இவருடன் இணைந்து பணியாற்றிய என்.வி.சுப்பாராவ்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இவர் எழுதிய கட்டுரைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. தன் வாழ்நாள் முழுவதும் வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும்தான் அணிந்தார்.

‘‘இந்த உடை என் தமிழ்மண்ணின் அடையாளம், தமிழ்மக்களின் பாரம்பர்யம். இதை அணிந்து உலகம் முழுவதும் பெருமையுடன் பயணம் செய்துள்ளேன்’’ என அடிக்கடி சொல்லுவார் முகமது இத்ரீஸ். சூழலியல் போராட்டங்களின் மூலம் அச்சுறுத்தல்கள், எதிர்ப்புகள் பல திசைகளிலிருந்து வந்த போதிலும், ‘‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’’ என்று பாடியபடியே இறுதிவரை அஞ்சாமல் களமாடினார்.

- பொன்.செந்தில்குமார்