Published:Updated:

அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

Published:Updated:
அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

டந்த மே 17-ஆம் தேதி, மலேசியா நாட்டின் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மூத்த செயற்பாட்டாளர் எஸ்.எம்.முகமது இத்ரீஸ் (93) இயற்கையுடன் கலந்தார். ராமநாதபுரத்தில் பிறந்து, இளம் வயதில் தன் தந்தையுடன் பினாங்கு பகுதியில் குடியேறினார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, பொதுச்சேவையில் ஆர்வம் இருந்தபடியால், சிலகாலம் அரசியலில் ஈடுபட்டார்.

அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

அரசியலைவிட மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த களப்பணிதான் அவசியமானது என்று எண்ணி, நுகர்வோர் உரிமை, மனித உரிமை, சுற்றுச்சூழல் போன்றவற்றுக்குக் குரல் கொடுக்கத் தொடங்கினார். தனிநபராகச் செயல்படுவதைக்காட்டிலும் ஓர் அமைப்பை நிறுவி, அதன்மூலம் செயல்படுவதே அர்த்தமானது என்று எண்ணினார். இந்த எண்ணத்தின் தொடர்ச்சியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, உணவகத்தின் சிறிய பகுதியில் ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை’ (Consumers Association of Penang) நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். இன்று அந்நாட்டின் மிகப்பெரிய அரசு சாரா தொண்டு அமைப்பாக வளர்ந்துள்ளது. இந்தச் சங்கத்தின் மூலம், நுகர்வோர் நலன், மனித உரிமை, சூழலியல், இயற்கை விவசாயம் போன்றவற்றை மக்களிடம் கொண்டுசெல்லத் தமிழ், ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் இதழ்கள் நடத்தப்படுகின்றன. இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்தில், இவர் எழுதிய கட்டுரைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

இச்சங்கத்தில் மலேசியாவில் உள்ள முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதம மந்திரிகள் போன்றவர்கள் அங்கம் வகித்துச் செயல்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் செயல்பட்டார். மலேசியாவில் சுற்றுச்சூழலுக்கு எதிராக எந்தப் பணிகள் நடந்தாலும், அதைக் கண்டித்து முதல் போராட்டம் நடத்துவது, இந்த அமைப்பாகத்தான் இருக்கும். இவரது அமைப்பு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் கரணமாகத்தான், 1975-ஆம் ஆண்டு, மலேசிய அரசாங்கம் ‘சுற்றுச்சூழல் துறையை’ உருவாக்கியது. அந்நாட்டில் உள்ள மக்கள் விஷமில்லாத உணவு உண்ண வேண்டும் என்பதற்காக, விவசாயம் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

அந்நாட்டு விவசாயிகளைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி இயற்கை விவசாயம் கற்று வரச்செய்து, பினாங்கு மாநிலத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்பிய முன்னோடி இவர். ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில், ‘பணிக்கம்பட்டி’ கோபாலகிருஷ்ணன், ‘பூச்சி’ செல்வம் போன்றவர்களை மலேசியாவுக்கு வரவழைத்து, தமிழ், சீன, மலேசிய விவசாயிகளுக்கு இயற்கை விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொடுக்க வைத்தார். நஞ்சில்லாத, ஆரோக்கியமான உணவு வகைகளை எல்லோரும் உண்ண வேண்டும் என்பதற்காகக் கண்காட்சி, கருத்தரங்குகளை நடத்திவந்தார்.

‘இன்று நான் பொதுவாழ்வில் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டவர், இத்ரீஸ். அன்பாக வழிகாட்டியவர். மக்கள் நலனில் அக்கறைகொண்டு வாழ்நாள் முழுவதும் செயல்பட்ட முதுபெரும் தலைவரை மலேசியா நாடு இழந்துவிட்டது’ என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார், அந்நாட்டின் பிரபல அரசியல்வாதியும், அடுத்த பிரதமராகப் பதவியேற்கவுள்ளவருமான டத்தோ அன்வர் இப்ராஹீம்.

அஞ்சலி: இயற்கையுடன் கலந்த ‘பசுமை’ நேசர்!

‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் அகமது இஸ்மாயில், ‘‘மனிதர்களையும் இயற்கையையும் நேசித்த மூத்த சகோதரரை இழந்துவிட்டேன். அவர் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தபோது, சந்தித்துப் பேசியது இப்போதும் பசுமையாக நினைவில் உள்ளது. பலமுறை அவரின் அழைப்பின் பேரில், மலேசியாவில் இயற்கை விவசாயம் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளேன்’’ என்றார் கரகரத்த குரலில்.

‘‘இயற்கையுடன் கலப்பதற்குச் சில தினங்களுக்கு முன்புகூட, பசுமை விகடன் இதழின் வாசகர் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்த தகவலைப் படித்துவிட்டு, ‘இன்னும் பல உயரங்களையும் சாதனைகளையும் படைக்கும்...’ என என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசினார். வெளிநாட்டு நண்பர்கள் யார் வந்தாலும், பசுமை விகடன் இதழை எடுத்துக்காட்டி, தமிழ்நாட்டில் நடந்துவரும் இயற்கை விவசாயப் பணிகளைப் பெருமையுடன் சொல்வார். அதில் வரும் முக்கியமான தகவல்களை, ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் மொழியாக்கம் செய்து உடனே வெளியிடச் சொல்வார்.

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்மேல் கொண்ட பற்றுக் காரணமாக, ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ நூலின் வெளியிட்டு விழாவை மலேசியாவில் நடத்திச் சிறப்புச் செய்தார். எப்போதும், வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் அணியும் இவரோடு, நாற்பது ஆண்டுக்காலம் இணைந்து பணியாற்றியுள்ளேன். என்னைத் தன் மகனைப் போலவே நடத்தினார். அவர் வழிகாட்டியபடி இயற்கை விவசாயத்தை மலேசியாவில் வேகமாகப் பரப்புவதும், சூழலியல் கல்வியைப் பள்ளிக் குழந்தைகளுக்குப் போதிப்பதுதான் அவருக்கு நாங்கள் செலுத்தும் நன்றிக் கடன்’’ எனக் கலங்கியபடியே பேசினார், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

-பசுமைக்குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism