பண்ருட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தாயும் மகனும் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பித்தோம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்வேலு. இவர் பி.இ முடித்துவிட்டு சென்னை யில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்த போது திவ்யா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் பிரணாப் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், ஆன்லைனில் ரம்மி விளையாடி னால் கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று அருள்வேலு ரம்மி விளையாட ஆரம்பித் திருக்கிறார். பணம் பறிபோனது; பின்னர் மனைவியின் நகை. விட்டதைப் பிடிக்க அதிக வட்டிக்குக் கடன் வாங்கி விளையாட ஆரம்பித் தார் அருள். கோடிக்கணக்கில் கடன். பணம் கொடுத்தவர்கள் அருள்வேலு வேலை பார்த்த சென்னை அலுவலகத்துக்கு வந்து மிரட்டியுள்ளனர். இன்னொரு கும்பல் அவரைக் கடத்திச் சென்றும் அடித்திருக்கிறது. கடனிலிருந்து மீள முடியாமல் சொந்த ஊர் திரும்பிய அருள் தன் அம்மாவோடு சேர்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகனுக்காக அவருடைய அம்மாவும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அருள்வேலுவின் தந்தை சிற்றரசிடம் பேசினோம். ‘‘எனது மகனும் மருமகளும் ஒன்றரை லட்சம் வரை சம்பாதித்தார்கள். என் மகன் சென்னையில் உள்ள ஒரு கந்து வட்டிக் கும்பலிடம் ஸ்பீடு வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறான். அவர்களிடம் சரியான நேரத் துக்கு வட்டி கொடுக்காததால் எனது மகனின் அலுவலகத்தில் வந்து கடுமையாக மிரட்டி இருக் கிறார்கள். இதுகுறித்து நானும் என் மருமகளும் தனித்தனியாகக் காவல்துறையில் புகார் கொடுத் தோம். அதற்குக் காவல் துறையினர் ‘பணம் கொடுத்தவர்கள் மிரட்டத்தான் செய்வார்கள்’ என்று அலட்சியமாகப் பேசினார்கள். கொஞ்ச நாள்கள் கழித்து என் மகன் வேலையைவிட்டு கிராமத்துக்கே வந்துவிட்டான். நான் இல்லாத நேரத்தில், என் மனைவியிடம் ‘எனக்குக் கடன் அதிகமாகிவிட்டது. இதிலிருந்து நான் மீண்டுவர முடியாது. இந்த உலகத்தில் நான் வாழ்ந்து எந்த புண்ணியமும் இல்லை. என் உயிரை மாய்த்துக் கொள்ளப்போகிறேன்’ என்று சொல்லியிருக் கிறான். அதற்கு அவள், ‘நீ இல்லாத உலகத்தில் நான் வாழ்ந்து என்ன பயன்...’ என்று இருவரும் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். சூதாட் டத்தால், என் குடும்பமே வீழ்ந்து விட்டது’’ என்று தழுதழுத்தார் சிற்றரசு.

வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ‘‘அருள்வேலு கடன் வாங்கி, ஆன் லைனில் ரம்மி ஆட ஆரம்பித்திருக் கிறார். கடன் கொடுத்தவர்களின் மிரட்டலால், வேலையைவிட்டு விட்டு பண்ருட்டி மேலப்பாளையத் தில் தாயாருடன் மூன்று மாதங்களுக்கு முன் வந்து தங்கியுள்ளார். இங்கேயும் கடன் கொடுத்தவர்கள் விடவில்லை. அருள்வேலுவைக் கடத்திக்கொண்டு போய் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த தாயார் ராஜவள்ளி வேறு வழியில்லாமல் மகனுடன் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார்’’ என்றனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட எஸ்.பி சரவணனிடம் பேசினோம். ‘‘இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் என்னிடம் வரவில்லை. கடன் தொல்லையால் இறந்த தாய் ராஜவள்ளியின் கடிதம் கிடைத்துள்ளது. அதைவைத்து வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அருள்வேலுவை மிரட்டியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

சில நாட்களுக்கு முன் மதுரையில் வேங்கடசுப்பிரமணியன், பட்டு மீனாட்சி தம்பதி தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியும் இதே போன்ற சம்பவம்தான்.

வேங்கடசுப்பிரமணியன் ‘டேட்டா அனாலிஸிஸ்’ எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், அவர் பல ஆய்வுகளில் ஈடுபட்டுவந்தார். வேங்கட சுப்பிரமணியன் - மீனாட்சி தம்பதி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கடன் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக ஒரு தரப்பும் குழந்தையில்லாத ஏக்கத்தின் காரண மாக இந்தச் சோக முடிவுக்கு வந்ததாக மற்றொரு தரப்பும் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய தற்கொலைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் முத்துராஜா கூறுகையில், “தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் எப்படிக் கையாள வேண்டும், அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து மக்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். மதுரையில் சில குடியிருப்புப் பகுதிகளில் இந்தியக் குற்றவியல் கழகம் என்ற அமைப்பின் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். அதில் குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்று எடுத்துக் கூறுகிறோம். அக்கம் பக்கத்தினருடன் கலந்து பேசுவது குறைந்துவருகிறது. வீட்டில் உள்ள நபர்களிடம்கூடப் பேசுவதில்லை. அதுபோன்ற நிலை மாறவேண்டும். அப்போதுதான் மன இறுக்கத்தில் இருந்து விடுபட முடியும்; தற்கொலை எண்ணம் ஏற்படுவதைத் தடுக்கவும் முடியும்” என்றார்.

வழக்கறிஞர் செல்வ கோமதி, “கூட்டுக்குடும்பம் முழுமையாகச் சிதைந்துவிட்டது. வீட்டில் இருப்பவர்களுடன் பேசக்கூட ‘நேரம் கிடைப்ப தில்லை’ என்று சொல்லி, தனிமைப்படுகிறோம். வீட்டிலேயே பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாவிட்டால், வேறு எங்கும் அதைத் தீர்க்க முடியாது” என்றார்.

உளவியல் சிகிச்சை நிபுணர் ப.இராஜ செளந்தர பாண்டியன், “தற்கொலை செய்துகொள்வோரில் பெரும்பாலானவர்கள், உடனடியாக எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை. மிகவும் பொறுமை யாகவும் உறுதியாகவும் முடிவுகளை எடுக்கின்றனர். தங்கள் முடிவை அவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் முன்கூட்டியே வெளிக்காட்டத் தொடங்கிவிடு வார்கள். அப்போதே மனநல மருத்துவரை அவர்கள் அணுக வழிசெய்துவிட்டால், தற்கொலை யைத் தடுத்துவிட முடியும்” என்றார்.

இந்த விஷயத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த வழி செய்யவேண்டும்!

- எம்.திலீபன், ஜி.சதாசிவம், அருண் சின்னதுரை
படங்கள்: எஸ்.தேவராஜன், ஈ.ஜெ.நந்தகுமார்