Published:Updated:

“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”

“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”
பிரீமியம் ஸ்டோரி
“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”

ஃபேஸ்புக்கில் ஆபாசப் படம்... பலியான இரு உயிர்கள்

“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”

ஃபேஸ்புக்கில் ஆபாசப் படம்... பலியான இரு உயிர்கள்

Published:Updated:
“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”
பிரீமியம் ஸ்டோரி
“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”

ல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் ஆபாசமாகப் பதிவிட்டதால், மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாகிவிட்டோமே எனத் தவறாகப் புரிந்துகொண்ட அவரின் மாமா மகனும் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் படத்தை ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து, ஃபேஸ்புக்கில் பதிவுசெய்த வாலிபர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடலூர் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளது போலீஸ்.

“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”

நெய்வேலி அருகே குறவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மகள் ராதிகா. இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிந்துவந்தார். ஜூன் 10-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ராதிகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண் டார். இவரின் தாய் மாமா மகன் விக்னேஷ். வடலூர் அருகே பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர். ராதிகா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த விக்னேஷ், அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இதற்கிடையே இவர்களின் தற்கொலைக்குக் காரணம், ராதிகாவின் வீட்டின் அருகே வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்கிற வாலிபர் தான் என்று கூறப்படுகிறது. இவர் ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டதால்தான் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”

குறவன்குப்பம் கிராமத்துக்குச் சென்று அக்கம்பக்கத்தினரிடம் பேசினோம். “ராதிகா தங்கமான பொண்ணுங்க. அவங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் பிரேம்குமாரின் வீடும் இருக்கு. அந்தப் பையன் ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை காதலிச்சாரு. ஒருகட்டத்துல அந்தப் பொண்ணைத் தன்னோட வீட்டுக்கும் கூட்டிட்டு வந்துட்டாரு. இதுசம்பந்தமா அந்தப் பொண்ணோட அப்பா போலீஸுல புகார் கொடுக்க... ‘மைனர் பொண்ணைக் கடத்திட்டதா’ பிரேம்குமாரை போலீஸ் கைதுசெஞ்சது. விக்னேஷின் ஃப்ரெண்டோட தங்கச்சிதான் அந்த மைனர் பொண்ணு. இதுல விக்னேஷ், அவரின் ஃப்ரெண்டுக்கு ஆதரவாகச் செயல்பட்டாரு. தவிர, பிரேம்குமாரைத் தேடி ஊருக்குள்ள போலீஸ் வந்தப்ப அவரோட வீட்டை ராதிகாதான் காட்டுனதா சொல்றாங்க. இந்தநிலைமையில்தான், ராதிகாவும் விக்னேஷும் காதலிக்கிறதாகவும் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறதாகவும் பிரேம்குமாருக்கு தகவல் போயிருக்கு. ஏற்கெனவே, ரெண்டு பேர் மேலயும் ஆத்திரத்துல இருந்த பிரேம்குமார், ஜூன் 10-ம் தேதி அன்னிக்கு பழிவாங்குற நோக்கத்துல, ஃபேஸ்புக்கில் இருந்த ராதிகாவோட படத்தை ஆபாசமா கிராபிக்ஸ் செஞ்சி பதிவேத்திட்டார்.

“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”

தன்னோட படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராதிகா, இதுபத்தி தன்னோட பெத்தவங்கக்கிட்ட சொல்லியிருக்கு. உடனே, அவங்க பிரேம்குமார் வீட்டுக்கு நியாயம் கேட்கப்போக... ஒருகட்டத்துல வாக்குவாதம் முத்தி, தகராறு ஆகிடுச்சு. அப்புறம், ராதிகாவையும் அவங்க பெற்றோர், ‘உனக்கெல்லாம் ஃபேஸ்புக் எதுக்கு’னு கடுமையா கண்டிச்சிருக்காங்க. இதுல விரக்தியடைஞ்ச அந்தப் பொண்ணு, அன்னிக்கு மத்தியானம் வீட்டுல யாரும் இல்லாதப்ப தூக்குமாட்டி செத்துப் போச்சு... விஷயத்தைக் கேள்விப்பட்டு, பதறியடிச்சி ஓடிவந்த விக்னேஷ் ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தார். அப்புறம் அந்தத் தம்பி என்ன நினைச்சதோ தெரியலை... பக்கத்துல இருக்கிற செங்கால்பாளையம் கிராமத்துக்குப்போய் அதுவும் தூக்கு மாட்டிக்கிட்டு செத்துப்போச்சு. வாழவேண்டிய ரெண்டு சின்னஞ்சிறுசுங்க, அநியாயமா செத்துப்போயிடுச்சுங்க...” என்றார்கள் வேதனையுடன்.

“வாழவேண்டிய புள்ளைங்க... அநியாயமா செத்துப் போயிடுச்சுங்களே!”

இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்த பா.ம.க-வினர் குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கோரி விருத்தாசலம் - கடலூர் சாலையில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கல்வீச்சில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் மண்டை உடைந்தது. நிலைமை எல்லை மீறியதால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து மறுநாள் பிரேம்குமார், அவரின் தந்தை பன்னீர்செல்வம், உறவினர் வல்லரசு ஆகியோரை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கைதுசெய்தனர் போலீஸார்.

இருவரும் தங்களை அழித்துக் கொண்டதால், அநியாயக்காரனின் எண்ணம்தான் மேலும் வென்றிருக்கிறது. அவன் மட்டும் குற்றவாளியல்ல, ‘அநியாயக்காரனுக்கு தண்டனை வாங்கித் தரும்வரை நாம் போராட வேண்டும்’ என்கிற எண்ணத்தைக் குழந்தைகளின் மனதில் விதைக்காத சமூகமும் குற்றவாளியே!

- ஜி.சதாசிவம்
படங்கள்:  எஸ்.தேவராஜன்