Published:Updated:

செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?
பிரீமியம் ஸ்டோரி
செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

Published:Updated:
செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?
பிரீமியம் ஸ்டோரி
செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

திர்ப்புக் குரல்களை நசுக்குவதும் மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதும் உரிமைக்காகப் போராடுபவர்களை அடக்குவதும் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. ஜார்கண்டில் வசிக்கும் மதபோதகர் ஸ்டான் சுவாமி வீட்டில், பீமா கோரேகாவ் கலவரம் தொடர்பாக சமீபத்தில் காவல்துறை நடத்திய சோதனை இதை உறுதிப்படுத்துகிறது.

செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் படையில் வீரர்களாக இருந்த பட்டியல் சமூகத்தினருக்கும் மராட்டிய பேஷ்வாக் களுக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில், பிரிட்டிஷ் படை வெற்றிபெற்றது. இதை நினைவுகூரும் வகையில், போரின் வெற்றித் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  புனேவுக்கு அருகில் இருக்கும் பீமா கோரேகாவ் என்ற இடத்தில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடைபெற்றது. பேரணியின்போது பட்டியல் சமூகத்தினருக்கும் மராட்டியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

கலவரம் நடந்து எட்டு மாதங்கள் கழித்துச் செயற்பாட்டாளர்கள் அருண் ஃபெரைரா, வரவர ராவ், வெர்னான் கான்சல்வேஸ், சுதா பரத்வாஜ்,  ஷோமா சென், கௌதம் நவ்லகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரிகள். இவர்கள் பட்டியல் சமூகத்தினரைத் தூண்டிவிட்டதால்தான் பேரணியில் வன்முறை வெடித்தது என்று குற்றம்சாட்டியது காவல்துறை. இந்தக் கலவரத்தில், ஸ்டான் சுவாமிக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகித்ததால், ராஞ்சியில் இருக்கும் அவரின் வீட்டிலும் சோதனை நடத்தியது காவல்துறை. (ஜார்கண்ட் மாநிலத்தில், பழங்குடியினரின் உரிமை மற்றும் வாழ்வாதாரத்துக் காகப் போராடுபவர் ஸ்டான் சுவாமி) இந்தச் சோதனை சம்பவம் நடைபெற்று 10 மாதங்கள் கழித்து, ஜூன் 12-ம் தேதி மீண்டும் ஸ்டான் சுவாமி வீட்டில் சோதனை நடத்தியுள்ளது காவல்துறை. இதில் சுவாமி யின் ஆவணங்கள், மடிக்கணினி, மொபைல் போன், கம்ப்யூட்டர், மோடம் ஆகியவற்றைத் தூக்கிச் சென்றுள் ளனர். அவரது ஃபேஸ்புக், இ-மெயில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. “இப்படியெல்லாம் செய்வதால், காவல் துறையினர் எதை நிரூபிக்கப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை” என்கிறார் 83 வயதான சுவாமி.

செயற்பாட்டாளர்களை நசுக்குகிறதா அரசு?

‘‘10 மாதங்களாகக் காவல்துறைக்குச் சாதகமாக எந்த ஆவணங்களும் கிடைக்காததால், மீண்டும் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இது அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை, ஒடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சி” என ஜார்கண்ட் ஜனதிகார் மஹாசபா கூறியுள் ளது. பி.யு.சி.எல் தேசியத் தலைவர் ரவின் கிரண் ஜெயின், “கடந்த ஆகஸ்ட் 2018-ல் செய்த தந்திரத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளது காவல்துறை. செயற் பாட்டாளர்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்’’ என்கிறார்.

எதிர்ப்புக்குரலை நசுக்கினால், ஒரு கட்டத்தில், அது வன்முறையாக வெடிக்குமே தவிர அடங்காது என்பதுதான் கடந்தகால வரலாறு கற்பிக்கும் பாடம்!

- கே.ராஜு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism