ஆளும்வர்க்கத்தை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’ என்று முத்திரை குத்தப்படலாம். அடங்கவேயில்லை என்றால் முகிலனைப்போல இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகலாம். இது இந்தியாவில்...அரபு நாடுகள் என்றால் அது இன்னும் ஆபத்தாக இருக்கும். சமீபத்திய சாட்சி... சவுதி பத்திரிகையாளர் ஜமால் காஷோகியின் படுகொலை. ஜனநாயகம், கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவாகத் தன் குரலை ஓங்கி உயர்த்தி உயிர் கொடுத்த பத்திரிகையாளர்களில் அதிமுக்கியப் பெயராகியிருக்கிறது ஜமால் காஷோகியின் பெயர்.

ஆப்கன் போர், ஒசாமா பின் லேடன் எழுச்சி எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றி எழுதி வந்த காஷோகி, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சியை விமர்சித்து சவுதி அரசுக்கு எதிராக எழுதத் தொடங்கியதும் அவருக்கான ஆபத்து அவரைத் துரத்த ஆரம்பித்தது. சவுதியில் இனி வாழ முடியாது என்ற சூழலில், குடிபெயர்ந்து அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கிருந்து வாஷிங்டன் பத்திரிகையில், சவுதி அரசுக்கு எதிராக, தொடர்ந்து காட்டமான செய்திகளை எழுதிவந்தார்.

தன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள ஜமால் துருக்கி சென்றிருந்தார். திருமணத்துக்கான ஆவணங்களைப் பெறுவதற்காக 2018 செப்டம்பர் 28 அன்று சவுதி தூதரகத்துக்குச் சென்ற காஷோகி மீண்டும் திரும்பவேயில்லை. சில நாள்கள் அவரைக் காணவில்லை என்று நாடகமாடிய சவுதி அரசு, துருக்கி மற்றும் பிற உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஜமால் தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்று ஒப்புக்கொண்டது.

ஜமால் காஷோகி

ஜமால் காஷோகியை, சவுதி அரசு திட்டமிட்டுப் படுகொலை செய்திருப்பதாக துருக்கி அரசு பகிரங்கமாகக் குற்றம்சாட்டி யிருக்கிறது. துருக்கி அரசின் புலனாய்வுத்துறையும், பத்திரிகை, ஊடகங்களும் தொடர்ந்து பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிட்டன. ‘ஜமால் கொலை எங்கள் மண்ணில் நடந்தது, இதில் பல மர்மங்கள் இருக்கின்றன. அதைக் கண்டுபிடித்தே தீருவோம்’ என்ற முனைப்போடு செயல்பட்ட துருக்கி, ஜமாலைக் கொலை செய்வதற்காக சவுதி மன்னரின் பாதுகாவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய 15 பேர் தனித்தனி விமானங்களில் துருக்கி வந்ததாகவும், ஜமால் கொலை செய்யப்பட்ட அன்றைய தினமே அவர்கள் அனைவரும் மீண்டும் நாடு திரும்பியதாகவும் தகவல் தெரிவித்திருந்தது.

ஜமால் காஷோகியின் விரல்கள் துண்டிக்கப்பட்டு அவை சவுதி அரசருக்குப் பரிசளிக்கப்பட்டதாக உறைய வைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜமாலின் கடைசி நிமிட ஆடியோவை துருக்கியின் உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறது. அவர் சித்ரவதை செய்யப்பட்டுதான் கொல்லப்பட்டார் என்பதற்கு அதை ஆதாரமாகக் காட்டுகிறது துருக்கி. ஜமால் இறப்பதற்கு முன்பு ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை, என்னால் சுவாசிக்க முடியவில்லை’ எனக் கதறியதாக சி.என்.என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. அவரது தலை துண்டிக்கப்பட்டதாகவும், உடல் துண்டாக்கப்பட்டு, அமிலத்தில் கரைக்கப்பட்டதாகவும், அடுக்கடுக்கான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தன.

அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்த சவுதி அரசு, அவரது கொலை தொடர்பான விசாரணை நடைபெறும் என்று மட்டும் கூறி விஷயத்தைக் கிடப்பில் போட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சவுதியுடனான நட்புறவைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை; ஜமால் காஷோகி ஓர் அமெரிக்கக் குடிமகனாக இருந்தவர், அவர் மரணத்துக்கு நீதி வேண்டி அமெரிக்கா குரல் கொடுக்க வேண்டும் என்கின்றனர் ஜமால் குடும்பத்தினர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை, இந்தக் கொலை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆக்னஸ் கல்லமார்டு என்ற நிபுணரைப் பணித்திருந்தது. ஆறு மாத விசாரணைக்குப் பின்னர் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார் ஆக்னஸ். அதில் “இது முன்கூட்டியே மிகத்தெளிவாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட கொடூரமான கொலை. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும், இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இளவரசர் முகமது பின் சல்மானை மேற்கொண்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆக்னஸ் தன் அறிக்கையில், “குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்ற போதும், இளவரசர் முகமது பின் சல்மான் சந்தேகத்து க்குட்பட்டவர், சர்வதேச மனித உரிமை சட்டத்துக்கு உட்பட்டு, சட்டத்துக்குப் புறம்பாகச் செய்யப்பட்ட இந்தக் கொடூரமான கொலைக்கு சவுதி அரசு பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அடல் - அல் - ஜுபைர், “இந்த அறிக்கையில் உள்ளவை அனைத்தும் முன்னுக்குப்பின் முரணான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என்று மறுத்திருக்கிறார்.

வரும் ஜூன் 26 அன்று இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. சர்வதேசப் பத்திரிகை யாளர்களின் கூட்டமைப்பு ( International Federation of Journalists) 2018 ஆம் ஆண்டு மட்டும், உலகம் முழுவதும் 94 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்களை வெளி யிட்டிருக்கிறது.

ஒன்று தெரிகிறது தெளிவாக... நாடு, மதம், இனம் வேறுவேறுதான். ஆளும்வர்க்கத்தின் குரூரங்களும் சமூகப் போராளிகளுக்கான சவால்களும் ஒன்றுதான்.

-ஜெனிஃபர் ம.ஆ