Published:Updated:

ஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்? - முன்னெச்சரிக்கை யோசனைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்? - முன்னெச்சரிக்கை யோசனைகள்!
ஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்? - முன்னெச்சரிக்கை யோசனைகள்!

ஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்? - முன்னெச்சரிக்கை யோசனைகள்!

பிரீமியம் ஸ்டோரி

டுக்கை அறையில் இதமான குளிரும் பருகுவதற்கு குளிர்வான நீரும் நமக்கு எப்போதும் அலாதி சுகம். இப்படி மகிழ்வைக் கொடுக்கும் என நாம் வாங்கிப் பயன்படுத்தும் குளிர் சாதனப் பொருள்களே உயிருக்கு உலை வைக்க ஆரம்பித்துவிட்டால்? சமீப காலங்களாக ஏ.சி மற்றும் ஃப்ரிட்ஜ் போன்ற குளிர்சாதனப் பொருள்கள் வெடித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ‘குளிர்சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவது வெடிகுண்டுகளை வீட்டில் வைத்துக்கொண்டே தூங்குவதற்குச் சமம்’ என்பதுபோல சூழல் மாறியிருப்பதால், இவற்றைப் பயன்படுத்தும் மக்கள்  அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

சென்னை சேலையூர் சுந்தரம் காலனி யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் பிரசன்னா. இவர் தனியார் செய்தித் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி அர்ச்சனா, ஆசிரியை யாகப் பணியாற்றினார். பிரசன்னாவின் தாயாரும் இவர்களோடு வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், மின் கோளாறினால் வீட்டிலுள்ள ஃப்ரிட்ஜ் வெடித்ததில், மூவரும் மூச்சுத் திணறி மரணமடைந்ததாகச் செய்தி வெளியானது.

ஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்? - முன்னெச்சரிக்கை யோசனைகள்!

பிரசன்னா குடும்பத்தினர் இறந்துபோன வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் வெடித்துச் சிதறிக்கிடந்ததையும் அதிலிருந்து வெளிவந்த வாயுவினால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்ததையும் வைத்து, ‘ஃப்ரிட்ஜ் வெடித்ததுதான் பிரசன்னா குடும்பத்தினரின் உயிரிழப்புக்குக் காரணம்’ எனக் காவல்துறையும் உறுதிப்படுத்தியது.

பெரும்பாலான வீடுகளில் ஏ.சி இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் சமையலறையில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. ஏசி, ஃப்ரிட்ஜ் ஆகியவை வெடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அடிக்கடி நடக்கின்றன. ஃப்ரிட்ஜில் உள்ள வாயு கசிந்து வீடு முழுவதும் பரவி தீ விபத்தை ஏற்படுத்திய சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

ஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்? - முன்னெச்சரிக்கை யோசனைகள்!

இதுகுறித்து செங்கல்பட்டைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் ஷாஜ கானிடம் பேசினோம். “தற்போது நவீன ரக மாடல்களாக வெளிவரும் ஏ.சி மற்றும் ஃப்ரிட்ஜ் ஆகியவற்றில், எளிதில் தீப்பிடிக்கும் தன்மைகொண்ட R-600A வாயுவானது உயர் அழுத்தத்தில் அடைக்கப்பட்டிருக்கிறது. எனவே, கம்ப்ரஸரில் உள்ள கேஸ் குழாய்களில், அடைப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனே மின்சாதனங்கள் வெடித்து விடுகின்றன.

பழைய மாடல் குளிர்சாதனப் பொருள்களில், குளோரோ ஃபுளூரோ கார்பன் (CFC) என்று அழைக்கப்படும் ஃப்ரேயான் வாயு பயன்படுத்தப் பட்டது. வாயுவின் அழுத்த அளவும் 130 என்ற அளவிலேயே இருக்கும். குளிர்சாதனங்களிலிருந்து வெளியேறும் இந்த வாயு, ஓசோன் மண்டலத்தில் மிகப்பெரிய பாதிப்பினை

ஏ.சி., ஃப்ரிட்ஜ் வெடிப்பது ஏன்? - முன்னெச்சரிக்கை யோசனைகள்!

ஏற்படுத்தும். எனவே,  தற்போது குளிர்சாதனப் பொருட்களில் மாற்று வாயுவாக R-600A -ஐ பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 230-லிருந்து 240 வரை யிலான அழுத்தத்தில் அடைக்கப் பட்டிருக்கும் இந்த வாயுவானது எளிதில் தீப்பிடிக்கும் தன்மையும் கொண்டது. ஆனாலும் பழைய மாடல்களில் உள்ள குழாய்களின் அளவையே புதிய மாடல் குளிர் சாதனங்களிலும் பயன்படுத்துகிறார் கள். இவையெல்லாம் விபத்துக்கு முக்கியக் காரணங்களாகிவிடுகின்றன.

பழைய மாடல்களில் கேஸ் அடைப்பு ஏற்பட்டால், கம்ப்ரஸர் சூடாகி ட்ரிப் ஆகிவிடும். ஆனால், தற்போதைய மாடல்களில், குழாயின் எந்தப் பகுதி ‘வீக்’காக இருக்கிறதோ அந்த இடத்தில் வெடித்து தீப்பிடித்துவிடுகிறது. பழைய மாடல்களில் கேஸ் குழாய்கள் வெடித்தா லும் தீப்பிடிக்காது. குளிர்சாதனப் பொருட்களில், அனுமதிக்கப்பட்டிருக் கும் அளவையும் தாண்டி வாயுவை அடைப்பதுவும் விபத்துக்குக் காரணம்.

மின் சிக்கனத்துக்காக ஏ.சி, ஃப்ரிட்ஜ் ஆகியவற்றில் இன்வெர்ட்டர் மாடல்கள் வந்துவிட்டன. இந்த மாடல்களில் குறைந்த மின்சாரம் மட்டுமே தேவைப் படும். இவைதான் அதிக அளவில் வெடிக்கின்றன. புதிய தொழில் நுட்பத் தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அந்தப் பொருள்களைப் பழுது பார்ப்பவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அதுபோல் ஏ.சி., ஃப்ரிட்ஜ் ஆகியவற்றைப் பழுதுபார்க்க வேண்டுமானால், நன்கு பயிற்சி பெற்றவர்களிடம் மட்டுமே கொடுக்கவேண்டும். மின்கசிவு ஏற்பட்டாலோ, மின்விநியோகம் சீரற்ற நிலையில் இருந்தாலோ மின்சாதனப் பொருள்கள் பழுதாகும் வாய்ப்பு அதிகம். இவற்றையெல்லாம் முறையாகக் கண்காணித்துக் கடைப்பிடித்து வந்தால், விபத்து ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்” என்கிறார்.

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு