Published:Updated:

அடுத்தடுத்து இறந்த 11 பசுக்கள்!- குப்பையில் கிடந்த விஷ மாவைச் சாப்பிட்டதால் விபரீதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அடுத்தடுத்து இறந்த 11 பசுக்கள்!- குப்பையில் கிடந்த விஷ மாவைச் சாப்பிட்டதால் விபரீதம்
அடுத்தடுத்து இறந்த 11 பசுக்கள்!- குப்பையில் கிடந்த விஷ மாவைச் சாப்பிட்டதால் விபரீதம்

அடுத்தடுத்து இறந்த 11 பசுக்கள்!- குப்பையில் கிடந்த விஷ மாவைச் சாப்பிட்டதால் விபரீதம்

மண்டபம் அருகே குப்பைக் கழிவுகளுடன் கொட்டப்பட்ட குறுணை மருந்து கலந்த சத்துமாவினை இரையாக உண்ட 11 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

அடுத்தடுத்து இறந்த 11 பசுக்கள்!- குப்பையில் கிடந்த விஷ மாவைச் சாப்பிட்டதால் விபரீதம்

 
 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமினை அடுத்துள்ள பகுதி முனைக்காடு. இங்குள்ள வண்ணாந்தரவைப் பகுதியில் மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்தினர் சேகரிக்கும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்தக் குப்பைக் கழிவுகளில் கலந்து கிடக்கும் உணவு, பழத் தோல்கள், காய்கறிகள் ஆகியவற்றை முனைக்காடு பகுதியில் வசிப்போருக்குச் சொந்தமான மாடுகள் இரையாக உட்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று காலை முனைக்காடு பகுதியிலிருந்து இரை தேடிச் சென்ற பசுக்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அந்தப் பசுக்களின் உரிமையாளர்கள் அவற்றைத் தேடிச் சென்றனர். அப்போது, பசுக்கள் வழக்கமாக இரை உண்ணும் இடத்தில் 11 பசுக்களும் அருகருகே இறந்து கிடந்துள்ளன. இதைக் கண்ட பசுவின் உரிமையாளர்கள் நாகலட்சுமி, பால்ராஜ், பாகம்பிரியாள் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தங்கள் பசுக்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து மண்டபம் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குப்பைக் கழிவுகளுடன் சேர்த்துக் கொட்டப்பட்டிருந்த குறுணை மருந்து கலந்த சத்துமாவினை பசுக்கள் உண்டதால் அவை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மண்டபம் பகுதி கால்நடை மருத்துவர்கள் இறந்த பசுக்களை உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர். உணவு தேடிச் சென்ற 11 பசுக்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் மண்டபம் முனைக்காடு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு