Published:Updated:

குமரியில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவர்கள் - தேடுதல் பணியில் கடலோரக் காவல் படை!

குமரியில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவர்கள் - தேடுதல் பணியில் கடலோரக் காவல் படை!
குமரியில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவர்கள் - தேடுதல் பணியில் கடலோரக் காவல் படை!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் பகுதியில் திடீர் கடல் சீற்றம் காரணமாக அங்கு விளையாடிக்கொண்டிருந்த நான்கு சிறுவர்களை ராட்சத அலை இழுத்துச் சென்றது. மாயமான சிறுவர்களைத் தேடும் பணியில் கடலோர காவல்படையினர் இன்று ஈடுபடுகின்றனர்.

குமரியில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவர்கள் - தேடுதல் பணியில் கடலோரக் காவல் படை!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் கடல் பகுதியில், சிறுவர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது பந்து, கடல் அலையில் விழுந்துள்ளது. பந்தை எடுக்க நான்கு சிறுவர்கள் சென்றுள்ளனர். அப்போது ராட்சத அலை திடீரென மேலெழுந்து நான்கு சிறுவர்களையும் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக கிராமத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் இறங்கி சிறுவர்களைத் தேடினர்.

குமரியில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவர்கள் - தேடுதல் பணியில் கடலோரக் காவல் படை!

அதில் இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அதில் சர்ச்சின்(14) என்ற சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு சிறுவனான சகாய ரெஜீஸ் (12) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுவர்கள் ரெக்சின்(11), ரெஜீஷ் (13) ஆகியோரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று கடலோரக் காவல் படையினர் படகுமூலம் சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan