Published:Updated:

மணிக்கணக்கில் பப்ஜி ஆட்டம்; மயங்கிவிழுந்து உயிரிழந்த மாணவர்! - ஈரோட்டில் சோகம்...

உயிரிழந்த சதீஷ்குமார்

'எப்போதும் போனையே நோண்டிக்கிட்டு இருக்கியே!' என சதீஷ்குமாரின் பெற்றோர் பலமுறை எச்சரித்துள்ளனர்.

மணிக்கணக்கில் பப்ஜி ஆட்டம்; மயங்கிவிழுந்து உயிரிழந்த மாணவர்! - ஈரோட்டில் சோகம்...

'எப்போதும் போனையே நோண்டிக்கிட்டு இருக்கியே!' என சதீஷ்குமாரின் பெற்றோர் பலமுறை எச்சரித்துள்ளனர்.

Published:Updated:
உயிரிழந்த சதீஷ்குமார்

ஊரடங்கினால் தமிழகத்தில் இறப்பு விகிதம் பாதியளவிற்குக் குறைந்திருக்கிறது, சாலை விபத்துகள் பெருமளவு குறைந்திருக்கின்றன எனப் பல புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சாலைகளில் வீறிட்டுச் செல்லும் ஆம்புலன்ஸ் சத்தமும் கடந்த 50 நாள்களில் வெகுவாய்க் குறைந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது. இதற்கெல்லாம் நேர்மாறாக, என்ன காரணமென்றே தெரியாமல் சில உயிர்கள் இந்தக் காலகட்டத்தில் பலியாவது அதிர்ச்சியை உண்டாக்குகிறது. அந்த வகையில், ஈரோட்டில் மொபைல் கேம் விளையாடிக்கொண்டிருந்த 16 வயது மாணவர் மயங்கிக் கீழே விழுந்து இறந்திருப்பது பெரும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

பப்ஜி கேம்
பப்ஜி கேம்

ஈரோடு கருங்கல்பாளையம் அருகே உள்ள கமலா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர், சதீஷ்குமார். இவர், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். லாக்டெளனால் வீட்டிலிருந்த சதீஷ்குமார், எப்போதுமே நண்பர்களுடன் ஃபோனில் அரட்டையடிப்பது, கேம் விளையாடுவது என்றிருந்திருக்கிறார். குறிப்பாக, ஆன்லைனில் நண்பர்களுடன் சேர்ந்து மணிக்கணக்கில் பப்ஜி விளையாடி வந்ததை சதீஷ்குமாரின் பெற்றோர் பலமுறை கண்டித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய சதீஷ்குமார், அருகே இருந்த மாட்டுச் சந்தை திடலில் உட்கார்ந்து வழக்கம் போல பப்ஜி விளையாடியிருக்கிறார். விளையாட ஆரம்பித்த சில மணிநேரத்தில், போனை கீழே போட்டுவிட்டு மயங்கிச் சரிந்துள்ளார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், சதீஷ்குமாரின் வீட்டுக்குத் தகவலைச் சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சதீஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டு சதீஷ்குமாரின் பெற்றோர்களும் உறவினர்களும் மருத்துவமனையில் கதறி அழுதனர். சதீஷ்குமாரின் இறப்புகுறித்து வழக்குப்பதிவு செய்திருக்கும் கருங்கல்பாளையம் போலீஸார் சிலரிடம் பேசினோம்.

"மொபைல் ஃபோனில் விளையாடிக்கொண்டிருந்தபோது சதீஷ்குமார், மயங்கிவிழுந்து உயிரிழந்திருக்கிறார். விளையாட்டினால்தான் அவர் உயிரிழந்தார் என்று தீர்க்கமாகச் சொல்ல முடியாது. சதீஷ்குமாருக்கு 16 வயதாக இருந்தாலும், கிட்டத்தட்ட 77 கிலோ உடல் எடையுடன் சற்று பருமனாகவே இருந்திருக்கிறார். ஹார்ட் அட்டாக்கினால் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவலில் தெரிந்திருக்கிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை நாளைக்குக் கிடைத்த பின்னர்தான் என்ன நடந்ததெனத் தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism