Published:Updated:

இந்திரா காந்தியை கைது செய்தவர்! - முன்னாள் டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் மறைவு

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்து 1985-ம் ஆண்டு ஓய்வுபெற்ற வி.ஆர்.லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 91. 

இந்திரா காந்தியை கைது செய்தவர்! - முன்னாள் டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் மறைவு

1951-ம் ஆண்டு மதுரையில் உதவிக் காவல் கண்காணிப்பாளராக முதன் முதலில் தனது பணியில் இணைந்தவர் பின்பு சட்டம் - ஒழுங்கு டிஜிபி உட்பட தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பெரியார், ராஜாஜி, இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் எனத் தமிழக அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். புகழ்பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரின் சகோதரரும்கூட. தமிழக காவல்துறையில் இருந்தவர் மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது லட்சுமி நாராயணன் சிபிஐ-யில் பணி செய்து வந்தார். 

அப்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சிபிஐ அதிகாரி என்ற முறையில் கைது செய்தார். அப்போது இது பெரும் சர்ச்சையானது. இதனால் அதிகம் பேசப்பட்ட நபராக இருந்தவர், மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது சிபிஐயில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழக காவல்துறைக்கே மாற்றப்பட்டார். தனது பணி ஓய்வுக்குப் பின் சென்னையில் வசித்து வந்தவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். நாராயணன் மறைவால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு