Published:Updated:

தலையில் கொத்தியது காகம்; உயிரை மாய்த்த என்ஜினீயர்

விகடன் விமர்சனக்குழு
தலையில் கொத்தியது காகம்; உயிரை மாய்த்த என்ஜினீயர்
தலையில் கொத்தியது காகம்; உயிரை மாய்த்த என்ஜினீயர்
தலையில் கொத்தியது காகம்; உயிரை மாய்த்த என்ஜினீயர்

பெங்களூர்: காகம் தலையில் கொத்தியதை கெட்ட சகுனமாக நினைத்த என்ஜினீயர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூர் வாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பெங்களூர் பசவேசுவரா நகரைச் சேர்ந்த என்ஜினீயர் ஆனந்த், அங்குள்ள இந்துஸ்தான் விமான தொழிற்சாலையில் பயிற்சி என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

சம்பவம் நடந்த அன்று அலுவலகத்துக்கு ஆனந்த் புறப்பட்டு சென்ற போது வீட்டு வாசல் அருகே, வேகமாக பறந்து வந்த ஒரு காகம் திடீரென்று அவரது தலையில் கொத்திவிட்டுச் சென்றது. இதை கெட்ட சகுனமாக நினைத்த அவர் உடனே இதுபற்றி, தனது தாயார் பார்வதியிடம் கூறியுள்ளார். அவர் ஆனந்தை சமாதானப்படுத்தினார்.

தாயாரின் ஆறுதலால் அங்கிருந்து புறப்பட்டு சென்ற ஆனந்த், அலுவலக வளாகத்துக்குள் நடந்து போய்க்கொண்டிருந்த போதும் மீண்டும் ஒரு காகம் பறந்து வந்த அவரது தலையில் கொத்தி விட்டுச்சென்றுள்ளது. இதனால் மிகவும் பயந்து போன ஆனந்த், உடனே தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு அதுபற்றி தெரிவித்தார்.

அப்போதும், "அதெல்லாம் ஒன்றுமில்லை, பயப்படாதே" என்று தாயார் பார்வதி, மகனை சமாதானப்படுத்தியுள்ளார்.

##~~##
அலுவலகத்தில் இருந்து இரவில் வீடு திரும்பிய பிறகும் காகம் கொத்திய அச்சத்தில் இருந்து விடுபடாத ஆனந்த், ஏதோ கெட்டது நடக்கப் போகிறது அதற்கான அறிகுறிதான் இது என்று தாயாரிடம் கூறியுள்ளார். அப்போதும், "கடவுளை வேண்டிக்கொள் நல்லதே நடக்கும்" என்று ஆறுதல் கூறியுளார் தாயார்.
ஆனாலும், ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்ற பயத்தில் இருந்த ஆனந்த் விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எவ்வளவுதான் நாகரீகம் வளர்ந்தாலும் இப்படி கெட்ட சகுன சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. என்ஜினீயர் ஆனந்த் உயிரை காக்க பறித்ததுதான் வேதனை.