Published:Updated:

இளவரசன் மரணம்: சிபிஐ விசாரணை கேட்கும் வழக்கறிஞர் ரஜினிகாந்த்

விகடன் விமர்சனக்குழு
இளவரசன் மரணம்: சிபிஐ விசாரணை கேட்கும் வழக்கறிஞர் ரஜினிகாந்த்
இளவரசன் மரணம்: சிபிஐ விசாரணை கேட்கும் வழக்கறிஞர் ரஜினிகாந்த்

சென்னை: "இளவசரன் உயிரிழப்பு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்" என்று அவரது தரப்பு வழக்கிறஞர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இளவரசன் மரணம்: சிபிஐ விசாரணை கேட்கும் வழக்கறிஞர் ரஜினிகாந்த்

தர்மபுரி செல்லங் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவை காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் கடந்த 4ஆம் தேதி ரயில் தண்டவாளம் அருகே மர்மமான முறையில் இருந்து கிடந்தார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இரண்டு முறை இளவரசன் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

##~~##
இதனிடையே, இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளவரசன் தரப்பு வழக்கிறஞர் ரஜினிகாந்த், இளவசரன் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இளவரசன் மரணம் குறித்து காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய ரஜினி காந்த், மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.
இல்லையென்றால் சி.பி.ஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார் ரஜினிகாந்த்.
படம்:
பாலசுப்பிரமணியன்