Published:Updated:

தற்கொலை செய்யப்போவதாக இளவரசன் பேசினார்: திவ்யா பரபரப்பு வாக்குமூலம்

தற்கொலை செய்யப்போவதாக இளவரசன் பேசினார்: திவ்யா பரபரப்பு வாக்குமூலம்
தற்கொலை செய்யப்போவதாக இளவரசன் பேசினார்: திவ்யா பரபரப்பு வாக்குமூலம்
தற்கொலை செய்யப்போவதாக இளவரசன் பேசினார்: திவ்யா பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: தற்கொலை செய்யப்போவதாக இளவரசன் தன்னிடம் போனில் பேசினார் என்று காதல் மனைவி திவ்யா காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இளவரசன் மரணம் குறித்து விசாரித்து வரும் அரூர் டி.எஸ்.பி. சம்பத் தலைமையிலான தனிப்படையினர், திவ்யாவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது திவ்யா அளித்த வாக்குமூலத்தில், "இளவரசன் தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு மன்பு என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நீ என்னோடு வாழ வராவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின்போது சென்னையில் லாட்ஜில் தங்கியிருந்தபோது தற்கொலைக்கு இளவரசன் முயற்சித்ததாகவும் திவ்யா கூறியுள்ளார்.

திவ்யாவும் இளவரசனும் செல்போனில் பேசிய பேச்சுக்களை செல்போன் நிறுவன உதவியுடன் போலீசார் பதிவு செய்து வைத்துள்ளனர். அதையும் திவ்யாவிடம் போலீசார் போட்டு காட்டி, "இது நீங்கள் இருவரும் பேசியதுதானா? என்று கேட்டுள்ளனர்.

##~~##
அந்த உரையாடலை கேட்ட திவ்யா, "இது நாங்கள் பேசியதுதான்" என்று தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய காதல் கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையெழுத்துதானா? என்று திவ்யாவிடம் கேட்டுள்ளனர். "இது இளவரசனின் கையெழுத்துதான்" என்று திவ்யா உறுதிப்படுத்தியுள்ளார்.
திவ்யாவின் தாய் தேன்மொழியும், இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னிடம் போனில் தொடர்பு கெண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.