Published:Updated:

விநாயகர் சிலை சப்பர பவனி: டிஜிட்டல் பேனர் வழியே பாய்ந்த மின்சாரம்... இருவர் பலியான சோகம்!

இருவர் பலியான சோகம்!

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, டிஜிட்டல் பேனர் கம்பி வழியே மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

விநாயகர் சிலை சப்பர பவனி: டிஜிட்டல் பேனர் வழியே பாய்ந்த மின்சாரம்... இருவர் பலியான சோகம்!

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, டிஜிட்டல் பேனர் கம்பி வழியே மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
இருவர் பலியான சோகம்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை அருகே இருக்கும் நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படும். இந்த நிலையில், அந்தப் பகுதி மக்களின் சார்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் விநாயகர் சிலை எடுத்துவைக்கப்பட்டு நேற்றிரவு ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது சப்பரம் செல்லும் வழியில் குறுக்காக இருந்த மரக்கிளையின்மீது மோதாமல் இருப்பதற்காக சப்பரத்தை வழிப் பாதையிலிருந்து சற்று விலக்கி நகர்த்தினர். இதில் எதிர்பாராதவிதமாக, அருகே இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மின் ஒயரில் சப்பரத்தில் கட்டியிருந்த டிஜிட்டல் பேனர் கம்பி தட்டி நின்றது. இதனால் டிஜிட்டல் பேனர் கம்பி வழியே மின்சாரம் கடத்தப்பட்டதில்... விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற முனீஸ்வரன், மாரிமுத்து ஆகியோர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டனர். மேலும் செல்வகிருஷ்ணன், செல்லப்பாண்டி ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தவர்களை மீட்டு தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், முனீஸ்வரனும் மாரிமுத்துவும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மரணம்
மரணம்

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மற்ற இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த சேத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.