Published:Updated:

வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு : சுஷ்மா வலியுறுத்தல்

வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு : சுஷ்மா  வலியுறுத்தல்
வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு : சுஷ்மா வலியுறுத்தல்
வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு : சுஷ்மா  வலியுறுத்தல்

புதுடெல்லி: வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான பாரபட்ச போக்கு கூடாது என்றும், நீண்ட மூக்கு உடையவர்களாக இருந்தாலும்...சப்பை மூக்கு உடையவர்களாக இருந்தாலும் அனைவரும் இந்தியர்களே என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

டெல்லி லாஜ்பாத் நகரில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் நிடோ டேனியமின் தலைமுடி அலங்காரம்  மற்றும் அவரது தோற்றம் குறித்து கடைக்காரர்கள் சிலர் கேலி செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் டேனியமின் பலியானார். இதனை அடுத்து டெல்லியில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இவ்விவகாரம் இன்று  மக்களவையில் புயலை கிளப்பியது. மத்திய இணை அமைச்சர் நினோங் இரிங், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இப்பிரச்னை குறித்து விவாதிக்க கோரினார்.

காலை மக்களவை தொடங்கியதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் தொடர்

வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு : சுஷ்மா  வலியுறுத்தல்

அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு மக்களவை கூடியபோது, நிடோ டேனியம் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரச்னையை எழுப்பி பேசிய பா.ஜனதா மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான பாரபட்ச போக்கு கூடாது என்றும், நீண்ட மூக்கு உடையவர்களாக இருந்தாலும்...சப்பை மூக்கு உடையவர்களாக இருந்தாலும் அனைவரும் இந்தியர்களே என்றும் கூறினார்.

வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மக்கள் மீது இனவெறுப்பு காட்டப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்றும், டெல்லியில் மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முன்னதாக மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார்.

##~~##
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மற்ற மாநில மாணவர்களுடன் தங்கி உள்ள வடகிழக்கு மாநில மாணவர்களுக்காக தனி தங்கும் விடுதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், வடகிழக்கு மாநில குழந்தைகளுக்கு நாட்டின் எந்த பகுதியிலும் தாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்ற உணர்வு ஏற்படவேண்டும் என்றும் கூறினார்.