Published:Updated:

தெலங்கானா, வகுப்புவாத தடுப்பு மசோதாவால் அமளி: முதல் நாளே முடங்கியது நாடாளுமன்றம்!

விகடன் விமர்சனக்குழு
தெலங்கானா, வகுப்புவாத தடுப்பு மசோதாவால் அமளி: முதல் நாளே முடங்கியது நாடாளுமன்றம்!
தெலங்கானா, வகுப்புவாத தடுப்பு மசோதாவால் அமளி: முதல் நாளே முடங்கியது நாடாளுமன்றம்!
தெலங்கானா, வகுப்புவாத தடுப்பு மசோதாவால் அமளி: முதல் நாளே முடங்கியது நாடாளுமன்றம்!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

12 நாட்கள் நடைபெறும் 15வது நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தெலங்கானா உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு அவை கூடியபோதும், அதே பிரச்னை காரணமாக அவையில் அமளி நீடித்தது. இதன் காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதேப்போன்று மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா தொடர்பாக மத்திய அரசை கடுமையாக குறைகூறி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, இம்மசோதா, மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்றார். 

##~~##
அதேப்போன்று, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், தி.மு.க. எம்.பி. செல்வகணபதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் அரசை குற்றம்சாட்டி பேசினர்.
அதனைத் தொடர்ந்து  ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹெலிகாப்டர் பேரம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அறிக்கை ஒன்றை வாசிக்க முற்பட்டார்.

ஆனால் தெலங்கானாவுக்கு எதிரான ஆந்திர மாநில எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் ஒருபுறம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தலித் விரோத அரசு என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் குரியன்.