Published:Updated:

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தூக்கு!

விகடன் விமர்சனக்குழு
மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தூக்கு!
மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தூக்கு!

மும்பை: மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தூக்கு!

மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பணி நிமித்தமாக புகைப்படம் எடுக்கச் சென்றபோது, ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த மும்பை நீதிமன்றம், 4 பேரை இபிகோ 376(இ) பிரிவின் கீழ் குற்றவாளிகள் என அறிவித்தது. இந்த   4 பேரும் , இதே சக்தி மில் வளாகத்தில் டெலிபோன் ஆப்ரேட்டர் ஒருவரையும் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தூக்கு!

மேற்கூறிய இரு பாலியல் பலாத்கார சம்பவங்களிலும் மொத்தம் 7 பேரை மும்பை போலீசார் கைது செய்திருந்தனர்.இவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் மீதான வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 5 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் வன்கொடுமை வழக்கில் இன்று தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகள் 4 பேரில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி மற்றும் சலீம் அன்சாரி ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதித்தும், மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.