Published:Updated:

நாங்குனேரி ஜீயர் மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!

விகடன் விமர்சனக்குழு
நாங்குனேரி ஜீயர் மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!
நாங்குனேரி ஜீயர் மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!
நாங்குனேரி ஜீயர் மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!

சென்னை:  நாங்குனேரி ஜீயர் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''மிகவும் பழமை வாய்ந்த நாங்குநேரி ஸ்ரீவான மாமலை ஜீயர் மடத்தின் ஜீயர் சுவாமிகள் கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் 30.4.2014 அன்று நாங்குநேரி மடத்தில் ஆசார்யன் திருவடியில் முக்தி அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

வானமாமலை ஜீயர் மடத்தின் 30வது ஜீயர் சுவாமியாக 1994 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளில் சிறு கதைகளையும், கவிதைகளையும் இயற்றிய பெருமைக்குரியவர்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆன் மீகத்தை பரப்பியதோடு மட்டுமல்லாமல், நாங்குநேரியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, மடத் திற்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக வழங்கிய பெருமை இவரையே சாரும்.

உலகப் புகழ் பெற்ற தமிழ் இலக்கியமான திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்த சிறப்பினைப் பெற்ற இவர், அதில் பொதிந்துள்ள கருத்துகளை நாளும் தவறாது பின்பற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தி வந்தார். பல்வேறு வேத புத்தகங்களை எழுதிய கலியன் வானமாமலை ஜீயர் அவர்களிடம் தீட்சை பெற்ற பல மடாதிபதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆன் மிகப் பணியாற்றி வருகின்றனர்.

கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயரை இழந்து வாடும் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தின் சிஷ்ய பெருமக்களுக்கும், மடத்தின் பணியாளர்களுக்கும், ஆன் மிக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் ஆன்மா ஆசார்யன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று இரங்கல் கூறியுள்ளார்.