Published:Updated:

திருமண கனவோடு ஊருக்கு செல்லும்போது சுவாதியை தழுவி கொண்ட மரணம்!

விகடன் விமர்சனக்குழு
திருமண கனவோடு ஊருக்கு செல்லும்போது சுவாதியை தழுவி கொண்ட மரணம்!
திருமண கனவோடு ஊருக்கு செல்லும்போது சுவாதியை தழுவி கொண்ட மரணம்!
திருமண கனவோடு ஊருக்கு செல்லும்போது சுவாதியை தழுவி கொண்ட மரணம்!

சென்னை: திருமண கனவோடு, முதல் மாத சம்பளத்தில் குடும்பத்தினருக்கு பரிசு பொருட்களை வாங்கி கொண்டு ஊருக்கு செல்லும்போது சுவாதியை மரணம் தழுவிக் கொண்டுள்ளது.

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலியான சுவாதியின் தந்தை ராமகிருஷ்ணன் ஒரு விவசாயி. அவரது மனைவி காமாட்சி தேவி. இவர்கள் குண்டூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக கடந்த மாதம் தான் பணிக்கு சேர்ந்துள்ளார் 24 வயதான சுவாதி.

அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் ஒருமாத விடுப்பில் சென்னை வழியாக குண்டூருக்கு கவுகாத்தி ரயிலில் பயணம் செய்துள்ளார்.

தனது பாட்டியிடம் நேற்றிரவு தொலைபேசியில் பேசிய சுவாதி, முதல் மாத சம்பளத்தில் பரிசுப் பொருட்களை வாங்கி வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சுவாதியின் வருகைக்காக காத்திருந்த குடும்பத்தினருக்கு, அவரது இறப்பு செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.