Published:Updated:

என்.எல்.சி. கொதிநீர் குழாய் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: என்.எல்.சி.யில் கொதிநீர் குழாய் வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் கொதிநீர் குழாய் வெடித்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று (30ஆம் தேதி) மாலை உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.