Published:Updated:

திருக்கோவிலூர் அருகே பிரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி!

Vikatan Correspondent
திருக்கோவிலூர் அருகே பிரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி!
திருக்கோவிலூர் அருகே பிரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி!
திருக்கோவிலூர் அருகே பிரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே பிரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 42). இவர், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆடூர் கொளப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு மாலதி (23), அருணா (17), சிந்துஜா (12) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

மாலதி சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். அருணா சேலம் மாவட்டம் தேவியாகுறிச்சியில் பிளஸ்–2 படித்து வருகிறார். சிந்துஜா மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். கந்தவேலுவின் தாயார் பார்வதி (70)யும் அவர்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் படித்து வரும் மாலதி ஒரு வார விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று இரவு கந்தவேல் அவரது மனைவி சுகந்தி, தாயார் பார்வதி ஆகியோர் ஒரு அறையில் படுத்து தூங்கினார்கள். மாலதி, சிந்துஜா ஆகியோர் மற்றொரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென்று வீட்டின் சமையல் அறையில் உள்ள பிரிட்ஜ் வெடித்து சிதறியது. அதைத்தொடர்ந்து கரும்புகை வீடு முழுவதும் பரவியது.

குளிர்பதனப் பெட்டியிலிருந்து வாயு கசிந்ததில் தூங்கிக் கொண்டிருந்த கந்தவேல், சுகந்தி, பார்வதி ஆகிய 3 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த மாணவி மாலதி மற்றும் அவரது தங்கை சிந்துஜாவும் வீட்டில் கரும்புகை சூழ்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து முன்பக்க கதவை திறந்து கொண்டு அவர்கள் 2 பேரும் வெளியே ஓடி வந்து உயிர் தப்பி இருக்கிறார்கள்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயர்மின் அழுத்தம் காரணமாக பிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.