Published:Updated:

கட்டட விபத்தில் மேலும் 4 பேர் உயிருடன் மீட்பு: பலி எண்ணிக்கை 32 ஆனது!

Vikatan Correspondent
கட்டட விபத்தில் மேலும் 4 பேர் உயிருடன் மீட்பு: பலி எண்ணிக்கை 32 ஆனது!
கட்டட விபத்தில் மேலும் 4 பேர் உயிருடன் மீட்பு: பலி எண்ணிக்கை 32 ஆனது!

சென்னை: முகலிவாக்கம் கட்டட விபத்தில் மேலும் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

கட்டட விபத்தில் மேலும் 4 பேர் உயிருடன் மீட்பு: பலி எண்ணிக்கை 32 ஆனது!

சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் ஒன்று கடந்த சனிக்கிழமையன்று மாலை திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த சுமார் 72 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கிய நிலையில், பலர் உயிருடனும் சடலமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

இன்று காலை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் மீட்பு பணி வேகமாக நடந்து வந்தது.

மீட்புப் பணியில் 750 போலீசார், 360 தீயணைப்புப் படை வீரர்கள், 402 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காயங்களுடன் மீட்கப்படுபவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க விபத்து நடந்த பகுதியில் 30 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கொண்ட குழுவும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில்,  கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. விடிய விடிய தொடர்ந்து நடந்து வரும் மீட்பு பணியில், ஏற்கனவே இன்று காலை ஆந்திராவைச் சேர்ந்த மகேஷ் என்பவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஆந்திராவை சேர்ந்த அனுசூர்யா உள்பட 4 பேரை உயிருடன் பேரிடர் மீட்புக்குழு மீட்டுள்ளது. இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் விடிய விடிய தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அந்த பகுதியில் சடலங்களின் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால், இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்ற அச்சம் மீட்பு குழுவினரிடம் ஏற்பட்டுள்ளது.