Published:Updated:

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் காலமானார்!

விகடன் விமர்சனக்குழு
பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் காலமானார்!
பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் காலமானார்!
பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் காலமானார்!

சென்னை: பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 45.

1969ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பாலகோலில் பிறந்த ஸ்ரீனிவாஸ், கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1998ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2010ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதும் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெற்றார்.

பிரதமர், ஆளுநர் இரங்கல்

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ரோசைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் காலமானார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

மத்திய அரசின் "பத்மஸ்ரீ", "சங்கீத ரத்னா" உள்பட பல விருதுகளைப் பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். மாண்டலின் ஸ்ரீனிவாஸின் மறைவு கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

மாண்டலின் ஸ்ரீனிவாஸை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழசை செளந்தர்ராஜன் 


பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் காலமானார்!

தமிழக பாஜக தலைவர் தமிழசை செளந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அரங்கல் செய்தியில், "மாண்டலின் ஸ்ரீனிவாஸ் இசைக்கு ஆற்றிய தொண்டும், மீட்டிய இசையும், காற்றுள்ளவரை இறவாப்புகழுடன் இருக்கும். அவர் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். என் சார்பிலும், பா.ஜனதா சார்பிலும் இழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "மாண்டலின் ஸ்ரீனிவாஸ் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. அடுத்த உலகத்தில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.