Published:Updated:

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவிற்கு மார்க்சிஸ்ட் இரங்கல்!

Vikatan Correspondent
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவிற்கு மார்க்சிஸ்ட் இரங்கல்!
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவிற்கு மார்க்சிஸ்ட் இரங்கல்!
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவிற்கு மார்க்சிஸ்ட் இரங்கல்!

சென்னை: மாண்டலின் இசைக் கலைஞர் ஸ்ரீனிவாஸ் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனது ஒன்பதாவது வயதில் இசைக் கலைஞர் ஸ்ரீனிவாஸ் மேடைகளில் மாண்டலின் இசைக் கச்சேரியை துவங்கினார். பயிற்சியாளர்களின் உதவியின்றிதானே சுயேட்சையாக மேற்கத்திய இசைக் கருவியான மாண்டலினில் கர்நாடக இசையை இசைத்து, இசைத்துறையில் புதிய சாதனையைப் படைத்தார்.

கர்நாடக இசைக்கும் ராகத்திற்கும் ஏற்றாற் போன்று மாண்டலின் இசைக் கருவியில் சில மாற்றங்களைச் செய்து புதுமையை செய்து காட்டியவர் ஸ்ரீனிவாஸ்.

ஆந்திராவில் பிறந்து சொந்த மண்ணில் இசைப் பயணத்தைத் துவக்கி பின்பு 1981 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து இசைக் கச்சேரியை நடத்தி வந்தார். நமது தேசத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் பலவற்றிற்கு சென்று இசைத்தவர் ஸ்ரீனிவாஸ். பல விருதுகள் பெற்ற இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இசைக் கலைஞர் ஸ்ரீனிவாஸ் மறைவு இசைத்துறைக்கு பெரும் இழப்பு. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவினால் துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறியுள்ளார்.