Published:Updated:

தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து: கருணாநிதி வரவேற்பு!

தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து: கருணாநிதி வரவேற்பு!
தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து: கருணாநிதி வரவேற்பு!
தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து: கருணாநிதி வரவேற்பு!

சென்னை: தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதை வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''14-11-2014 அன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்று நான் கடந்த 31-10-2014 அன்று விடுத்த அறிக்கையில் கேட்டுக்கொண்டிருந்தேன். அதேபோல், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளும், மீனவர் அமைப்புகளும், தமிழக அரசும், மத்திய அரசுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
 
தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் விடுதலை பற்றி பேசியதையடுத்து, தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி இன்றைய தினம் (14-11-2014) கிடைத்துள்ளது.

தமிழக மீனவர் 4 பேரின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து: கருணாநிதி வரவேற்பு!

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. கிளைக் கழக கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று (14ஆம் தேதி) நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடியை வலியுறுத்தி வந்தனர். மேலும், பல்வேறு போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து: கருணாநிதி வரவேற்பு!

இந்நிலையில், மீனவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது. இந்த முயற்சியினை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, விரைவாக அவர்களை மீட்டு அழைத்து வர வேண்டும். அதற்கான முயற்சிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி மூலம் தொடர்ந்து வலியுறுத்துவோம்'' என்றார்.

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி