Published:Updated:

தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் பலி!

விகடன் விமர்சனக்குழு
தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் பலி!
தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் பலி!

தர்மபுரி:  தருமபுரி அரசு மருத்துவமனையில்  பிறந்த  5 குழந்தைகள் ஒரே நாளில் இறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் பலி!

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஈச்சம்பாடியைச் சேர்ந்த குமுதா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதேபோல், ஆரூர் கோபிநத்தம்பட்டியை சேர்ந்த ஜெயகாந்தி, பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த  பூர்ணிமா, திருப்பத்தூரைச்சேர்ந்த ஷோபனா, பைசுஅள்ளியைச் சேர்ந்த பழனியம்மாள் ஆகிய 4 பேருக்கு பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இந்த 5 குழந்தைகளும் நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் திடீரென இறந்துவிட்டன.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் பலி!

இதையடுத்து, மருத்துவர்களின் சிகிச்சை குறைபாடுதான் குழந்தைகள் இறக்க காரணம் என்று குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், மூன்று குழந்தைகள் பிறக்கும் போதே எடை குறைவாக இருந்ததாலும், இரண்டு குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு இருந்ததாலும் இறந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் பலி!

இதுகுறித்து மருத்துவ தரப்பில் கூறும்போது, ''ஒரு குழந்தை சராசரியாக 2.5 கிலோவிலிருந்து 3 கிலோ வரை இருக்க வேண்டும். ஆனால், குமுதாவின் ஆண் குழந்தை 1.25 கிலோவும், பூர்ணிமாவின் பெண் குழந்தை 1.03 கிலோவும், பழனியம்மாளின் குழந்தை 1.1 கிலோவும் தான் இருந்தது. இந்த குழந்தைகள் மிகக்குறைவாக இருந்ததால்தான் காப்பாற்ற முடியவில்லை. அதேபோல், ஷோபனா மற்றும் ஜெயகாந்திய இருவரின் குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு இருந்ததால் இறந்துவிட்டது. மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் ஐந்து குழந்தைகள் இறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


-எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: வி.சதீஷ்குமார்