Published:Updated:

இயக்குநர் பாலசந்தர் மறைவு: கருணாநிதி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

இயக்குநர் பாலசந்தர் மறைவு: கருணாநிதி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!
இயக்குநர் பாலசந்தர் மறைவு: கருணாநிதி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

சென்னை: திரைப்பட இயக்குநர் பாலசந்தரின் உடலுக்கு திரையுலகினர் மற்றும் கருணாநிதி, வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குநர் பாலசந்தர் மறைவு: கருணாநிதி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

திரைப்பட இயக்குநர் சிகரம் என போற்றப்படும் கே.பாலசந்தர் நேற்று காலமானார். 84 வயதான பாலசந்தர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ஏழு மணி அளவில் மரணமடைந்தார்.

இயக்குநர் பாலசந்தர் மறைவு: கருணாநிதி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர்கள் முத்துராமன், சமுத்திரகனி, சேரன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.