Published:Updated:

சென்னை அருகே அரக்கோணத்தில் ரயில்கள் மோதி விபத்து: 10 பேர் பலி; காயம் 80

சென்னை அருகே அரக்கோணத்தில் ரயில்கள் மோதி விபத்து: 10 பேர் பலி; காயம் 80
சென்னை அருகே அரக்கோணத்தில் ரயில்கள் மோதி விபத்து: 10 பேர் பலி; காயம் 80

சென்னை அருகே அரக்கோணத்தில் ரயில்கள் மோதி விபத்து: 10 பேர் பலி; காயம் 80

சென்னை, செப்.14,2011

சென்னை அருகே அரக்கோணத்தில் ரயில்கள் மோதி விபத்து: 10 பேர் பலி; காயம் 80

சென்னையை அடுத்த அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது மின்சார ரயில் பயங்கரமாக மோதி செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியாகினர். சுமார் 80 பேர் காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து காட்பாடி செல்லும் பாசஞ்சர் ரயில் ஒன்று அரக்கோணம் அருகிலுள்ள மேல்பாக்கம் சித்தேரி என்ற இடத்தில் சிக்னலுக்காக காத்திருந்தது.

அந்த ரயில் மீது இரவு 9.40 மணியளவில் அரக்கோணம் வழியாக வேலூருக்குச் செல்லும் மின்சார ரயில் பயங்கரமாக மோதியது.

இதில் மோதிய மின்சார ரயிலின் என்ஜின் நொறுங்கியது. ஒரு பெட்டியும் சேதம் அடைந்தது. மோதப்பட்ட பாசஞ்சர் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் கவிழ்ந்தன. ##~~##

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்த சுமார் 80 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ரயில்வே உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும்  விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அரக்கோணம் மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இவ்விபத்து நிகழ்ந்த இடம் மிகவும் இருட்டான பகுதி என்பதாலும், மழை பெய்துகொண்டிருந்ததாலும் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

தகவல் மையம்...

அரக்கோணம் ரயில் விபத்து பற்றிய தகவல்களை அறிய சென்னை சென்டிரலில் சிறப்பு விபத்து தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தைத் தொடர்பு கொள்ள..

044-25327771
044-25330710


ரயில்கள் புறப்படும் நேரம் குறித்த விவரத்துக்கு - 044- 25357398 என்ற எண்களில் அழைக்கலாம்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் எஸ். நாகராஜன், காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திர பாபு, ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சுநீல்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு, உதவிப் பணிகளை ஒருங்கிணைத்தனர். தீயணைப்புத்துறையும் 108 ஆம்புலன்ஸ்களும் மீட்பு, உதவிப் பணிகளுக்கு உதவின. வேலூரிலிருந்து மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையில் டாக்டர்கள் குழு விரைந்தது. விபத்துப் பகுதிக்கு மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் விரைந்தார்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தேசியபேரிடர் நிவாரணக் குழுக்களும் சென்னை, பெங்களூரிலிருந்து சம்பவ இடத்துக்கு விரைந்தது. மீட்புப் பணிகள் காலையிலும் நீடித்தது.

நிவாரண நிதி அறிவிப்பு...

ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெற்கு ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மீட்பு, உதவிப் பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்தது.

ரயில்வே அமைச்சர் திரிவேதி விபத்து நடந்த இடத்தைப் பார்க்கவும், காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறவும் இன்று சென்னை வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு