Published:Updated:

ரயில் விபத்தில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி

ரயில் விபத்தில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி

சென்னை, செப்.14,2011 ##~~##

அரக்‍கோணம் அருகே சித்தேரியில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியானோருக்‍கு தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்‍கப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தை வாசித்த சட்டப் பேரவைத் தலைவர் டி.ஜெயக்‍குமார், "இந்த விபத்தில் 10-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், 80-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் ஆற்றொணாத் துயரத்தை அளிக்கிறது," என்றார்.

பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு