Published:Updated:

கன்டெய்னரில் வந்த 39 சடலங்கள்!- அதிர்ந்த லண்டன் போலீஸ்

இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் மற்றும் ஒருவர் இளைஞர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலங்களை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி!
சடலங்களை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி! ( AP )

இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஷ் நகரில் உள்ள ஒரு தொழில் பூங்காவின் அருகே இருந்த கன்டெய்னர் லாரியிலிருந்து 39 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கன்டெய்னர் லாரி பல்கேரியாவிலிருந்து வந்திருக்கலாம் என லண்டன் போலீஸார் சந்தேகிக்கின்றனர். பல்கேரியாவிலிருந்து ஹோலிஹெட் வழியாக இங்கிலாந்து நாட்டுக்குள் லாரி நுழைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. லாரியின் டிரைவர் 25 வயது இளைஞர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சடலங்களை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி
சடலங்களை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி
AP

இது குறித்துப் பேசியுள்ள எசெக்ஸ் போலீஸ் உயரதிகாரி ஆண்ட்ரூ மரைனர், ``அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலமாக எங்களுக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. இது ஒரு சோகமான சம்பவம், ஏராளமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் மற்றும் ஒருவர் இளைஞர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை 1.40 மணியளவில் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். என்ன நடந்தது என்பது குறித்து எங்கள் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எனினும் இது ஒரு நீண்ட நாள் பணியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவு; தண்டவாளத்தில் அடுத்தடுத்து 4 சடலங்கள்! - ஆந்திர போலீஸார் அதிர்ச்சி