Published:Updated:

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிரைவர் தற்கொலை!

Vikatan Correspondent
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிரைவர் தற்கொலை!
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிரைவர் தற்கொலை!
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிரைவர் தற்கொலை!

கோவை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் டிரைவர் முருகேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

கோவை குனியம்புத்தூர், பி.கே.புதுரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று காலை கோவை, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோட்டிலுள்ள நாராயணசாமி லேஅவுட்டில் பொள்ளாச்சி ஜெயராமனின் வீட்டிற்கு வந்தார். அங்கு 4வது மாடியில் உள்ள செட்டில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், முருகேசனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட முருகேசனுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். ஆனால், முருகேசனின் மகள் கடந்த சில தினங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல், இறந்து விட்டாராம். இதனால் துக்கத்தில் இருந்த முருகேசன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும், பொள்ளாச்சி ஜெயராமனின் வீட்டில் தற்கொலை செய்திருப்பதால் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து விசாரித்து வருகின்றனர்.

-ச.ஜெ.ரவி