Published:Updated:

ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு 3 மாதம் கால அவகாசம்!

Vikatan Correspondent
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு 3 மாதம் கால அவகாசம்!
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு 3 மாதம் கால அவகாசம்!
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு 3 மாதம் கால அவகாசம்!

மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மேலும், 3 மாதம் கால அவகாசம் அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராமஜெயத்தின் மனைவி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''இந்த வழக்கு முக்கிய கட்டங்களை எட்டியுள்ளது. இருப்பினும், குற்றவாளிகளை பிடிப்பதற்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்'' என சி.பி.சி.ஐ.டி. காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மேலும் 3 மாதம் காலஅவகாசம் அளித்ததோடு, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.