Published:Updated:

`4 பேரின் உயிரைப் பறித்த ரூ. 80 லட்சம் கடன்; 3 பேர் கவலைக்கிடம்'- சென்னையில் சோகம்!

குடும்பத்தில் உள்ள அனைவரும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், உடனடியாக ஆம்புலன்ஸுக்கும், போலீஸுக்கும் தகவல் தெரிவித்தார்.

கோவிந்தசாமி
கோவிந்தசாமி

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (65). சிவசக்தி நகர் 24-வது தெருவில், மனைவி குப்பம்மாள் (60), மகன்கள் நாகராஜன் (35), ரவி (30), மகள் கல்யாணி (28) ஆகியோருடன் வசித்துவந்தார். கான்ட்ராக்டரான கோவிந்தசாமி, அந்தப் பகுதியில் 10 பேரை வைத்து சாலை போடும் பணி மற்றும் வீடு கட்டும் பணிகளைச் செய்துவந்தார். இந்நிலையில், அவரின் மருமகன் ஆறுமுகம், நேற்று மாலை 4 மணி அளவில் தனது மனைவி கல்யாணியைப் பார்க்க வந்துள்ளார்.

கோவிந்தசாமி
கோவிந்தசாமி

அப்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், உடனடியாக ஆம்புலன்ஸுக்கும் போலீஸுக்கும் தகவல் தெரிவித்தார். அதற்கு முன்னதாக மற்றவர்கள் நால்வரும் உயிரிழக்க, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கல்யாணி, குழந்தைகள் சர்வேஸ்வரி (8) ,யோகப்பிரியா (6) ஆகியோர் வாயில் நுரைதள்ளி, ஆபத்தான நிலையில் மீட்டு, ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று ள்ளார்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்த நால்வரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிந்து விசாரித்த போலீஸார், இந்த வழக்கு குறித்துப் பேசுகையில், ``கோவிந்தசாமி, தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து தொழிலுக்காக 80 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். மகளுக்கு கல்யாணம் முடித்த பின், இந்தக் கடனுக்கு வட்டி மேல் வட்டியாக வந்துள்ளது.

தற்கொலை
தற்கொலை

கடன் தொல்லையில் இருந்தவர், ஒருகட்டத்தில் அதை சமாளிக்க முடியாமல் வேறுவழியின்றி குடும்பத்துடன் தற்கொலை முடிவு எடுத்து விஷம் குடித்துள்ளனர். கோவிந்தசாமி, மனைவி குப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழத்தனர். மற்ற 3 பேரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்" என்றனர்.