Election bannerElection banner
Published:Updated:

கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது

கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது
கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது

கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது

சென்னை, செப்.24,2011

கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது

முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி இன்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ##~~##

திருவொற்றியூர் கே.வி. குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு ஆகிய இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு மாயமானார்கள்.

"சுனாமி நிவாரண நிதி பிரிப்பதில் என் கணவருக்கும், அப்போது அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமிக்கும் கடும் தகராறு ஏற்பட்டது. எனவே, அவர்தான் என் கணவரைக் கொலை செய்திருப்பார் என்று நினைக்கிறேன்..." என, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் காணாமல் போன மீனவர்களின் மனைவிகள் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, அவரது சகோதரர்கள் கே.பி.சங்கர், கே.பி. சொக்கலிங்கம், வைத்திலிங்கம், சுந்தரம், குமார், டைசன், யோபு ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவர்களை தேடி வந்தனர்.

இதையடுத்து, கே.பி.பி.சாமியின் சகோதரர்கள் கே.பி.சங்கர், கே.பி.சொக்கலிங்கம் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். வைத்திலிங்கம், சுந்தர், குமார், டைசன், யோபு ஆகிய 5 பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை - திருவொற்றியூரின் கே.வி.கே. குப்பத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி இன்று காலை கைது செய்யப்பட்டார்.
 
முன்னதாக நிருபர்களிடம் கே.பி.பி.சாமி கூறுகையில், "நடக்காத ஒரு சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த அதிர்ச்சியில் எனது மனைவி உமா சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். என் தம்பிகளையும் இந்த பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த பொய் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து சட்டப்படி நிரபராதி என்று நிரூபித்து வெளியில் வருவேன்," என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு