Published:Updated:

திருவாரூரில் பருத்தி விவசாயி தற்கொலை!

Vikatan Correspondent
திருவாரூரில் பருத்தி விவசாயி தற்கொலை!
திருவாரூரில் பருத்தி விவசாயி தற்கொலை!
திருவாரூரில் பருத்தி விவசாயி தற்கொலை!

திருவாரூர்: டெல்லியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகில் உள்ள சித்தன்வாழ்வூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாராமன் (37). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார். அந்த நிலத்தில் பருத்தி பயிரிட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் எதிர்பாராத சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழைக்கு பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றன. இதில் விவசாயி ராஜாராமனின் வயலும் சேதமடைந்தது. இதனால் மனமுடைந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விசாரணை செய்துவரும் போலீசார் தெரிவிக்கையில், "மழைக்கு விவசாயி ராஜாராமனின் பருத்தி வயல் பாதிக்கும் மேல் சேதமாகிவிட்டது. இதனால் மனமுடைந்த அவர் சனிக்கிழமை இரவு தோட்டத்துக்கு தெளிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பிறகு மயக்கமான ராஜாராமனை, அக்கம் பக்கத்தினர் பார்த்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் இறந்துவிட்டார்" என்றனர்.

"வாங்கிய கடனை திருப்பி செலுத்துறது எப்படின்னு கவலையோடு இருந்தார்" என்கிறார் விவசாயியின் உறவினர்.

கடந்த வாரம் டெல்லியில் நடந்த பேரணியில் மழைக்கு பயிர்கள் அழிந்த சோகத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரா சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கு. ராமகிருஷ்ணன்