Published:Updated:

பாலியல் வன்கொடுமையால் 42 ஆண்டுகள் கோமா: மும்பை நர்ஸ் அருணா பரிதாப மரணம்!

Vikatan Correspondent
பாலியல் வன்கொடுமையால் 42 ஆண்டுகள் கோமா: மும்பை நர்ஸ் அருணா பரிதாப மரணம்!
பாலியல் வன்கொடுமையால் 42 ஆண்டுகள் கோமா: மும்பை நர்ஸ் அருணா பரிதாப மரணம்!
பாலியல் வன்கொடுமையால் 42 ஆண்டுகள் கோமா: மும்பை நர்ஸ் அருணா பரிதாப மரணம்!

மும்பை: 42 ஆண்டுகளுக்கு முன்பு வார்டு பாயால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மும்பை நர்ஸ் அருணா,  கோமா நிலையிலேயே பரிதாப மரணம் அடைந்தார்.

மும்பை கிங் எட்வர்டு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்துவந்த அருணா ஷான்பாக்கை, கடந்த  1973 ஆம்  ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி இரவு, அங்கு வார்டுபாயாக பணிபுரிந்த பார்த்தா வால்மீகி என்பவர் கடுமையாகத் தாக்கி மருத்துவமனையிலேயே பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த சம்பவத்தால் அருணா கடுமையாகப்  பாதிக்கப்பட்டார். வார்டுபாய்க்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 42 ஆண்டுகளாக அருணா கோமா நிலையிலேயே இருந்தார். இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தை அடுத்து 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை நர்ஸ் அருணா ஷான்பாக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிமோனியாவில் அவதிப்பட்ட அருணா ஷான்பாக்கிற்கு வயது 68 ஆகும். கடந்த சிலநாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் மூச்சுவிடுவதற்கு பெரிதும் அவதிப்பட்டுள்ளார்.இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2011 ஆம்  ஆண்டு,  அருணாவின் நண்பரும், வழக்கறிஞருமான பிங்கி விரானி என்பவர் அவரைக் கருணைக் கொலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு எட்வர்டு மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார்.

நீதிமன்றம்  அருணாவை கருணைக் கொலைசெய்ய அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற, மருத்துவமனை நிர்வாகம், அருணாவை தொடர்ந்து சிறப்புடன் கவனித்து வந்தது.  மருத்துவமனையில் பணிபுரிந்த அனைத்து நர்சுகளும் அவரை நன்கு கவனித்து வந்துள்ளனர்.