Published:Updated:

நில மசோதா எனக்கு வாழ்வா... சாவா பிரச்னை இல்லை: மோடி

நில மசோதா எனக்கு வாழ்வா... சாவா பிரச்னை இல்லை: மோடி
நில மசோதா எனக்கு வாழ்வா... சாவா பிரச்னை இல்லை: மோடி

நில மசோதா எனக்கு வாழ்வா... சாவா பிரச்னை இல்லை: மோடி

நில மசோதா எனக்கு வாழ்வா... சாவா பிரச்னை இல்லை: மோடி

புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் சட்டம் தனக்கு வாழ்வா சாவா பிரச்னையில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதாவை மூன்றாவது முறையாக நிறைவேற்ற  இன்று மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், மோடி இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,
 “ இது எனக்கு வாழ்வா, சாவா பிரச்சினை கிடையாது. எனது கட்சி அல்லது அரசின் முக்கிய குறிக்கோளாகவும் இது இருந்ததில்லை" என்றார்.

மேலும், மோடியின் தலைமையிலான ஓராண்டு மத்திய அரசின் ஆட்சியை 'சூட்-பூட் கி சர்க்கார்'  என்று ராகுல் காந்தி கிண்டல் செய்தது குறித்து கருத்து தெரிவித்த மோடி, " சூட்கேஸை விட சூட்-பூட் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். 60 ஆண்டுகள் ஆண்டு முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு திடீரென்று ஏழைகள் மீது அக்கறை வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் குறுகிய நோக்கம் கொண்ட கொள்கைகளால் இந்த நாட்டு மக்கள் வேதனைகளை அனுபவித்து, ஏழைகளாகவே உள்ளனர்.

நிலக்கரி சுரங்க முறைகேடு, ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்றவற்றால் ஏழை மக்கள் பலனடைந்தார்களா? பலன் அடைந்தவர்கள் யார்? என்பதும், குறிப்பிட்ட சில தொழிலதிபர்களும், ஒப்பந்தக்காரர்களும்தான் பலன் அடைந்தனர் என்பதும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்" என்று கடுமையாகக்  கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு