Published:Updated:

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன்!

மதுரை: நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லையில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்கள் பணி நியமனத்தில் பணம் கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இந்த தற்கொலை வழக்கில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகிய இருவரும் ஏப்ரல் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, ஜாமீன் கேட்டு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு