Published:Updated:

2 மாணவர்கள் மரணம்: பள்ளி முதல்வரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!

2 மாணவர்கள் மரணம்: பள்ளி முதல்வரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!
2 மாணவர்கள் மரணம்: பள்ளி முதல்வரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!

2 மாணவர்கள் மரணம்: பள்ளி முதல்வரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!

நாலந்தா: 2 மாணவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்தததையடுத்து அந்த பள்ளி முதல்வரை, கிராம மக்கள் அடித்தே கொன்ற விவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், நாலந்தாவை அடுத்த மிர்பூரில் வி.பி.எஸ். என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 4 மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர்.

2 மாணவர்கள் மரணம்: பள்ளி முதல்வரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!

இந்நிலையில், காணாமல் போன 4 மாணவர்களில் 2 பேர் திரும்பி வந்திருக்கின்றனர். மற்ற இருவரையும் காணவில்லை. இந்நிலையில், காணாமல் போன ரிக்குமார், சாகர் குமார் ஆகிய இரு மாணவர்களின் சடலம் பள்ளியின் அருகே இருந்த நீர் நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் அடித்ததால்தான் அந்த மாணவர்கள் இறந்திக்கிறார்கள் எனக் கூறிய அந்த கிராம மக்கள், பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை அடித்து, நொறுக்கி தீ வைத்தனர். மேலும், பள்ளி சமையல் அறையில் இருந்த சிலிண்டரையும் திறந்து விட்டு வெடிக்கச் செய்தனர். அதேபோல், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

2 மாணவர்கள் மரணம்: பள்ளி முதல்வரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!

அப்போது அங்கு இருந்த பள்ளி முதல்வர் தேவேந்திர பிசாத் சிங்கையும் வெளியே இழுத்து வந்து கம்பு, கற்கள் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த காவல்துறையினர் மீதும், கிராம மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் 6 போலீசார் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கிராம மக்களை கலைத்தனர். படுகாயம் அடைந்த பள்ளி முதல்வர் தேவேந்திர பிரசாத் சிங்கை சிகிச்சைக்காக பாட்னாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே, பள்ளி முதல்வரை அடித்துக் கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாலந்தா காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு