Published:Updated:

அப்துல்கலாம் மறைவு... 7 நாள் அரசு துக்கம் அனுசரிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல்கலாம் மறைவு... 7 நாள் அரசு துக்கம் அனுசரிப்பு!
அப்துல்கலாம் மறைவு... 7 நாள் அரசு துக்கம் அனுசரிப்பு!

அப்துல்கலாம் மறைவு... 7 நாள் அரசு துக்கம் அனுசரிப்பு!

அப்துல்கலாம் மறைவு... 7 நாள் அரசு துக்கம் அனுசரிப்பு!

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்காக நாடு முழுவதும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறைச் செயலர் எல்.சி.கோயல் தெரிவித்துள்ளார். மேலும், கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல், அப்துல்கலாம் மறைவுக்கு தமிழகத்திலும் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கலாமின் மறைவையயொட்டி, வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் இந்த நாட்களில் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு