Published:Updated:

சசிபெருமாள் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: சொல்கிறார் சுப.உதயகுமார்

Vikatan Correspondent
சசிபெருமாள் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: சொல்கிறார் சுப.உதயகுமார்
சசிபெருமாள் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: சொல்கிறார் சுப.உதயகுமார்
சசிபெருமாள் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: சொல்கிறார் சுப.உதயகுமார்

தருமபுரி: காந்தியவாதி சசிபெருமாள் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அணுசக்தி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட தினம் நாளை தருமபுரி பெரியார் மன்றத்தில் அனுசரிக்கப்பட உள்ளது. அதை முன்னிட்டு இன்று நடந்த கருத்தரங்கில் சு.ப.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்

''அணுசக்தி இல்லாத பசுமை பொருளாதாரம்தான் தமிழகத்தின் தற்போதைய முதன்மையான தேவையாக  இருக்கிறது. அதனை முன்னெடுக்க எந்த அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை. கேரள மாநில ஆறுகளில் மருந்துக்கு கூடமணல் எடுக்க விடமாட்டார்கள். ஏனென்றால், அதன் அருமையும், அவசியமும் அவர்களுக்கு தெரியும். ஆனால், இங்கிருந்து கேரளாவிற்கு அதிகளவில் மணல் கொள்ளையடித்து கொண்டு செல்லப்படுகிறது. யாரும் தட்டிக்கேட்க தயாராக இல்லை. இதனை உடனடியாகத் தடுக்காவிட்டால் தமிழகம் பாலைவனமாகுவதோடு, வருங்கால சந்ததிக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாத சூழல் உருவாகும்.

இன்றைக்கு மக்கள் அரசியல்கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் இதை மாற்ற வேண்டுமானால் இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வர வேண்டும். மீத்தேன் எரிவாயு திட்டம் மக்களின் போராட்டம் காரணமாக தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எண்ணெய் வளம் குறித்து ஆராய்வதாக கூறி திருட்டுதனமாக திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மதுவினால் ஒரு தலைமுறை சீரழிந்து விட்டது. காந்தியவாதி சசிபெருமாள் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வு''என்றார்.

இறுதியாக, இந்திய உயர்கல்வித்துறையில் தங்கு தடையின்றி அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் காட் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடக் கூடாது என்பதை வலியுறுத்தி தருமபுரி மக்கள் மன்றம் சார்பில் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருக சென்ற ஊர்வலத்தை கல்வியாளர் மீனாட்சி உமேஷ் தொடங்கி வைத்தார்.

எம்.புண்ணியமூர்த்தி