Published:Updated:

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: திமுக மனு தள்ளுபடி!

விகடன் விமர்சனக்குழு
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: திமுக மனு தள்ளுபடி!
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: திமுக மனு தள்ளுபடி!
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: திமுக மனு தள்ளுபடி!

சென்னை:  டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 18 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர்,  உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால்தான்  தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலையை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி, திமுகவைச்  சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர் நீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை தொடர்ந்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் தலைமை நீதிபதி கவுல், " நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக மாற்றாதீர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் பரிசீலிக்கலாம்" என்று குறிப்பிட்டு மனுவை விசாரிக்க மறுத்ததோடு, அரசியல் சண்டைக்கு நீதிமன்றத்தைப்  பயன்படுத்த வேண்டாம் என்றும்  கண்டனம் தெரிவித்தார்.