Published:Updated:

189 பேரை பலி வாங்கிய ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: மும்பை நீதிமன்றம் அதிரடி!

189 பேரை பலி வாங்கிய ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: மும்பை நீதிமன்றம் அதிரடி!
189 பேரை பலி வாங்கிய ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: மும்பை நீதிமன்றம் அதிரடி!

மும்பை: மும்பையில் 2006 ல் நடந்த ரயில்  தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
 

189 பேரை பலி வாங்கிய ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: மும்பை நீதிமன்றம் அதிரடி!


கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, மும்பை புறநகர் ரயில்களின் முதலாம் வகுப்பு பெட்டிகளில் 7 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் வெடித்தன. இதில் 189 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 14 பேர் தலைமறைவாக உள்ளனர்.

189 பேரை பலி வாங்கிய ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: மும்பை நீதிமன்றம் அதிரடி!

இந்த வழக்கின்  விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
8 ஆண்டுகளாக நடைபெற்ற வந்து வழக்கில் 192 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 மருத்துவர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நிறைவுற்ற நிலையில், கடந்த 11ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிமன்றம், 12 பேர் குற்றவாளி என அறிவித்ததோடு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் வாஹித் சாகிப் என்பவரை விடுதலை செய்தது. குற்றவாளிகளுக்கான  தண்டனை விவரம் செப்டம்பர் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தது. 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையே, தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என குற்றவாளிகளின் சட்ட உதவியாளர் குஜார் ஹாஸ்மி தெரிவித்துள்ளார்.