Published:Updated:

உ.பி.யில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை: 6 பேர் கைது!

விகடன் விமர்சனக்குழு
உ.பி.யில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை: 6 பேர் கைது!
உ.பி.யில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை: 6 பேர் கைது!

உத்தரபிரதேசத்தில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

உ.பி.யில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை: 6 பேர் கைது!

இந்தியாவில் பசுவை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். பாஜக ஆளும் சில மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் அமலில் இருக்கிறது.

அண்மையில், மாட்டு இறைச்சி விற்பனைக்கு மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் மேலும் பல மாநிலங்களிலும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மொஹாமத் அக்லாக் என்பவர் வீட்டில், மாட்டு இறைச்சியை சேமித்து வைத்து சாப்பிட்டதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த மொஹமத் அக்லாக்கை வெளியில் இழுத்து வந்த கும்பல் ஒன்று, அவரை கடுமையாக அடித்து உதைத்தது. இதில் பலத்த காயம் அடைந்த மொஹமத் பலியானார். மேலும், அவரது மகனும் இந்த கும்பலால் தாக்கப்பட்டார்.

இந்த நிலையில், மொஹமத் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.